கல்குடா முஸ்லிம்களின் வரலாற்றுத் தொகுப்பு நூல்! - Sri Lanka Muslim

கல்குடா முஸ்லிம்களின் வரலாற்றுத் தொகுப்பு நூல்!

Contributors

கல்குடா தொகுதி முஸ்லிம்களின் வரலாற்று தொகுப்பு எனும் நூலைத் தொகுத்து வெளியிடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் எம்.ரீ.எம் றிஸ்வி மஜீதி தலைமையிலான குழு தொகுக்கவுள்ள இந்த நூலில் கல்வி, கலாசாரம் உள்ளிட்ட பல்வேறுபட்ட வரலாற்று தொகுப்புகள் உள்ளடக்கப்படவுள்ளன.

கல்வி வரலாறு தொடர்பாகத் தகவல் திரட்டும் பணியில், ஒய்வுபெற்ற பிரதி கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.எம் அஸ்ரப், ஓய்வுபெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.ஏ காதர் ஆகியோர் செயற்பட்டு வருகின்றனர். அந்தவகையில், செவ்வாய்க்கிழமை (24) வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்துக்கு விஜயம் செய்து, தகவல் திரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

இதில், பாடசாலை அதிபர் என். சஹாப்தீன், பகுதித் தலைவர் எஸ். பாறூக் ஆகியோர் கலந்து கொண்டு, நூல் உருவாக்கத்துக்குத் தேவையான தகவல்களை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

 

எச்.எம்.எம். பர்ஸான்

Web Design by Srilanka Muslims Web Team