கல்முனையில் இன்று சீனிக்கு பலத்த தட்டுப்பாடு! - Sri Lanka Muslim

கல்முனையில் இன்று சீனிக்கு பலத்த தட்டுப்பாடு!

Contributors

கல்முனை பிராந்தியத்தில் இன்று சீனிக்கு பலத்த தட்டுப்பாடு நிலவியது. பெரும்பாலான கடைகளில் சீனி இல்லை என்று சொல்லப்பட்டுள்ளது.

எனினும், ஒரு சில கடைகளில் ஒரு கிலோ சீனி 300 ரூபாய்க்கு  விற்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வாரம் ஒரு கிலோ சீனி 220 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்த வாரம் அது  250 ரூபாயாகி 300 ரூபாய் வரை உயர்ந்திருக்கிறது.

இவ்வாறு, சகல பொருட்களினதும் விலைகள் அதிகரித்து வருவதால் மக்கள் பெரும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர்.

Web Design by Srilanka Muslims Web Team