கல்முனையில் பரவிவரும் ஒருவகை வைரஸ் காய்ச்சல்! - Sri Lanka Muslim

கல்முனையில் பரவிவரும் ஒருவகை வைரஸ் காய்ச்சல்!

Contributors

கல்முனைப் பிரதேசத்தில் ஓர் வகை வைரஸ் பரவி வருவதோடு தொண்டை வலி, காய்ச்சல் தடிமன், இருமல் போன்றவற்றால் அதிகமானர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

பெரியோர் தொடக்கம் சிறியோர் வரை பாதிக்கும் இந்நோயினால் அரச தனியார் மருந்தகங்களில் கூட சிகிச்சைக்கு செல்வோர் தொகை அதிகரித்து வருவதைக் காணமுடிகின்றது.

குறிப்பாக அரச மருத்துவமனைகளில் வெளி நோயாளர் பிரிவுகளில் சிறுவர்கள் அதிகளவு சிகிச்சைப் பெற வருகை தருகின்றனர்.

கல்முனை பிரதேசத்திலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களில் நோயைக் கட்டுப்படுத்துவதற்கான முன்னேற்பாடுகள் சுகாதார வைத்திய அதிகாரிகளால் மேற்கொள்ளப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Web Design by Srilanka Muslims Web Team