கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் ஏற்பட்ட துரதிஸ்ட சம்பவங்களை பகிர்ந்துகொள்ளும் கூட்டம் - Sri Lanka Muslim

கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் ஏற்பட்ட துரதிஸ்ட சம்பவங்களை பகிர்ந்துகொள்ளும் கூட்டம்

Contributors

கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் சமீபத்தில்  ஏற்பட்ட  துரதிஸ்ட வசமான சம்பவங்களை பொது மக்களுடன் பகிர்ந்து கொள்ளும்  கூட்டம்  இன்று03-11-2013 பாடசாலையில் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்துக்கான அழைப்பை  சாஹிரா அதிபர் எம்.எஸ்.என், ஹம்ஸா அனுப்பி வைத்துள்ளார். பாடசாலை பழைய மாணவர்கள்,புத்திஜீவிகள்,பெற்றோர்கள் என பலதரப்பட்ட மட்டத்தினர் இக்கூட்டத்துக்கு அழைக்கப் பட்டுள்ளனர் .

இந்த ஆலோசனைக் கூட்டம் இன்று 03.11.2013 மாலை 4.00 மணிக்கு சாஹிரா தேசிய  பாடசாலை  காரியப்பர் மண்டபத்தில்  அதிபர் தலைமையில் நடை பெறவுள்ளது.

அண்மையில் பாடசாலையில் இடம்பெற்ற சம்பவங்களினால்  மாணவர்களின் கல்வி நிலை பாதிக்கப் பட்டதை  கவனத்தில் கொண்டே இந்த கூட்டம் ஒழுங்கு செய்யப் பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இக்கூட்டத்தில்  சர்ச்சைக்குரிய ஆசிரியர் இருவரையும்  இடமாற்றுவது தொடர்பிலும் முடிவெடுக்கப்படவுள்ளது. மேலும் இவ்வாறான தொருபிரச்சினை  பாடசாலையில் ஏற்படாதிருப்பதற்கான உறுதியான தீர்மானமும் எடுக்கப் படவுள்ளதாக  தெரிய வருகிறது.

Web Design by Srilanka Muslims Web Team