கல்முனை மாநகர சபையின் வருமானத்தை மேம்படுத்த விசேட இணைய சேவை - Sri Lanka Muslim

கல்முனை மாநகர சபையின் வருமானத்தை மேம்படுத்த விசேட இணைய சேவை

Contributors

-அஸ்லம் எஸ்.மௌலானா-

கல்முனை மாநகர சபையின் வருமானத்தை மேம்படுத்தும் பொருட்டு ஆசிய மன்றம் விசேட இணைய சேவை திட்டம் ஒன்றை அங்கு நடைமுறைப்படுத்தவுள்ளது. இத்திட்டத்திற்காக ஆறு இலட்சம் ரூபா பெறுமதியான கணனி உபகரணத் தொகுதியொன்று ஆசிய மன்றத்தினால் கல்முனை மாநகர சபைக்கு வழங்கப்படடுள்ளது.

ஆசியா மன்றம் நடைமுறைப்படுத்தி வரும் உள்ளுர் பொருளாதார ஆளுகை செயற் திட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபையின் வருமானத்தை மேம்படுத்தவும், மக்களிடமிருந்து அறவிடப்படுகின்ற சோலை வரியினை முறையாகப் பேணவும் மாநகர சபையின் வருமானம் மற்றும் செலவுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ளும் வகையிலும் இவ்விசேட இணைய சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

கல்முனை மாநகர அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இது தொடர்பான நிகழ்வில் கல்முனை மாநகர முதல்வர்- சட்ட முதுமானி நிஸாம் காரியப்பரிடம் ஆசியா மன்றத்தின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி எம்.ஐ.எம். வலீத் குறித்த கணனி உபகரணத் தொகுதியைக் கையளித்தார்.

அத்துடன் மேற்படி விசேட திட்டம் தொடர்பில் ஆசியா மன்றத்தின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத் விளக்கமளித்ததுடன் இது விடயத்தில் ஆசிய மன்றம் மேற்கொள்ளவுள்ள பங்களிப்புகள் தொடர்பிலும் தெளிவுபடுத்தினார்.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, கணக்காளர் எம்.சாலிதீன், பொறியியலாளர் ஏ.எச்.ஹலீம் ஜௌசி ஆகியோருடன் மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team