கல்முனை மாநகர சபையில்;; 21ஆசனங்களுக்கு மேல் பெற்று UNP தனியாக ஆட்சியமைக்கும் - றக்கீப் - Sri Lanka Muslim

கல்முனை மாநகர சபையில்;; 21ஆசனங்களுக்கு மேல் பெற்று UNP தனியாக ஆட்சியமைக்கும் – றக்கீப்

Contributors
author image

P.M.M.A.காதர்

கல்முனை மாநகர சபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியியின் யானைச் சின்னத்தில் போட்டியுயிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும்,முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினரும்,சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஏ.எம்.றக்கீப்புடனான நேர்காணல்.   
நேர்காணல் :-பி.எம்.எம்.ஏ.காதர்)


கேள்வி:-நடைபெறவிருக்கும் புதிய வட்டாரத் தேர்தல்முறைபற்றி உங்களுடைய அபிப்பிராயம் என்ன?
பதில்;:-இந்த வட்டாரத் தேர்தல் முறை புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிற கலப்புமுறையிலும்,வட்டார ரீதியாகவும் வீகிதாசார ரீதியாகவும் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவிருக்கின்றார்கள் கல்முனை மாநகரசபைக்காக 40 உறுப்பினர்களில் 24 பேர் வட்டாரரீதியாகவும் மற்றும் 14 பேர் விகிதாசார ரீதியாகவும் தெரிவு செய்யப்படவிருக்கின்றார்கள்.

வட்டாரத் தேர்தல் முறை என்பது கடந்தகால வீகிதாசாரத் தேர்தலோடு ஒப்பிடும்போது ஒரு கஷ்டமானதொரு தேர்தல் முறை என்றே கூறவேண்டும். ஏனென்று சொன்னால் முன்னர்; ஒரு கட்சிக்கு அளிக்கப்படுகின்ற வாக்குகளிலிருந்து உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் அதே நேரம் அந்தக் கட்சியில் ஆகக் கூடுதலான வாக்குகளை எடுக்கின்ற உறுப்பினர்களின் அடிப்படையில் அந்தக் கட்சிக்குரிய உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படுவார்கள்.

கல்முனை மாநகரசபையாக இருந்தால் பெரிய நீலாவணை தாமரைமடு தொடக்கம் சாய்ந்தமருது முடிகிற எல்லை வரை என்னுடைய ஆதரவாளர்கள் என்மீது அபிமானம் கொண்டவர்கள் இவர் தகுதியானவர்தான் என்று நினைக்கின்ற அனைவரும் எனக்கு வாக்களிக்கின்ற அல்லது அவர்களது விருப்பத்தைத் தெரிவு செய்கின்ற வாய்ப்பிருந்தது.

தற்போதுள்ள இந்த நிலையில் அந்த நிலவரம் குறுக்கப்பட்டு ஒரு வட்டாரத்திற்கான எல்லைகள் வகுக்கப்பட்டு அந்த வட்டாரத்திற்குள் உள்ளவர்களோடு நானும் ஒருவனாக இருக்க வேண்டும் அதே நேரம் அந்த மக்களுடைய தெரிவும் என்னை நோக்கியதாக இருக்க வேண்டும்.ஆக இந்த மக்களால் நானும் என்னால் அந்த மக்களும் திருப்திப்பட வேண்டும்.

கடந்;த காலங்களில் என்னால் அந்தப் பகுதியில் சேவைகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்.அல்லது நான் அவர்கள் விரும்புகின்ற சூழலில் இருக்க வேண்டும். அந்தத் தன்மையை இந்த வட்டாரத் தேர்தல் முறை புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட போது நாங்கள் ஒரு சிரமமாக இதனை எதிர் நோக்குகின்றோம்.

ஆதற்கான பாரிய சேவைகள் பலவற்றை நாங்கள் செய்திருக்கின்றோம்.ஆனால் இப்போது இந்திப்பிரதேசத்திற்குள் வரும்போது அந்த மக்கள் அவர்களுடைய கேள்விகள் எங்களை நோக்கிய அபிவிருத்திகள் எவ்வாறு செய்யப்படல் என்ற தொடர்பு இருக்கின்றது.எனவே இந்த முறையான ஒரு வட்டாரம் அதற்கான உறுப்பினரை தங்களுக்கான உறுப்பினரைத் தெரிவு செய்யப்போகின்றார்கள். அவர்களுடைய சேவைகள் அவர்களுடை வட்டாரத்தல் உள்ள மக்களை நோக்கியதாக இருக்கும்.

எனவே மக்கள் தங்கள் வட்டாரத்திற்குள் போட்டியிடும் வேட்பாளர்களில் தகுதியானவர்களைத் தெரிவு செய்ய வாய்ப்பிருக்கின்றது. அதேநேரம் அந்த உறுப்பினர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் பெரும்பாண்மையான வாக்குப் பெறுவதில் பலத்த போராட்டத்தை அவர்கள் சந்திக்க வேண்டியிருக்கின்றது. அதிகமான செலவுகளும் வருவதற்க வாய்ப்பிருக்கின்றது.

கேள்வி :-இந்தத் தேர்தலில் நீங்கள் வெற்றிபெற்றால் எவ்வாறான பணிகளை முன்னெடுக்கவிருக்கின்றீர்கள்?

பதில் :-எங்களை எதிர் நோக்குகின்ற மாநகரசபைத் தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றால் பிரதானமாக செய்யக்கூடியது வீதிகளைப் பராமரிப்பது,அடுத்தாக குப்பைகளை திண்மக்கழிவுகளை சேகரிப்பது அதனை அகற்றுவது,வீதி வடிகான்களை துப்பரவு செய்வது,வீதி விளக்களை மாற்றுவது புதிதாக இடுவது போன்ற விடயங்கள் இந்த மாநகரசபையினால் செய்யக்கூடியதாக இருக்கும்.

அடுத்ததாக திண்மக்கழிவகற்றல் என்பது மிகக்கஷ்டமானதொரு விடயம் ஏனென்றால் கல்முனைப் பொறுத்தளவில் மக்கள் செறிவாக உள்ளதொரு இடத்தில் நாளாந்தம் அவர்களால் வெளியேற்றப்படுகின்ற கழிவுகள் ஏறத்தாள 80 தொன்களுக்கு மேற்பட்டதாக இருக்கின்றது.அவற்றை அகற்றுவதோடு மாத்திரமல்லாது அதனை மற்றுமொரு இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது.இப்போது அந்தவிடயங்கள் தொடர்பில் அரசாங்கத்pனுடைய பார்வை மிகக்கடினமாக இருக்கின்றது.

மாநகரசபைக்குள்ளே நாங்கள் ஒரு கழிவு சேகரிக்கக்கூடிய இடமாக அல்லது அதனைக் கொட்டுகின்ற இடத்தை தேடுகின்றபோது கல்முனையை பொறுத்தமட்டடில் அதற்கான இடம் கிடைப்பது மிகச் சிரமமாகவிருக்கும். வாகனங்கள் போதிய வளமிருக்க வேண்டும் அதில் எந்தப்பிரச்சினையுமில்லை எதிர்காலத்தில் அதுதொடர்பான வளங்களைப் பெறக்கூடியதாகவிருக்கும்.அவைகள் பிரச்சினைகளாக இருக்காது மாநகரசபையுடைய வருமானத்தில் மிக அதழிகளவான பணத்தை திண்மக்கழிவகற்றுவதற்காக செலவுசெய்ய வேண்டியிருக்கிறது.

ஏனென்றால் இந்தத் திண்மக் கழிவுகளைச் சேகரித்துக் வாகனங்களினூடாக கொண்டு காரைதீவிலும் அட்டாளைச்சேனையிலும் இடுகிறோம்.அந்த இடங்கள் அட்டாளைச்சேனை மற்றும் காரைதீவுப் பிரதேசசபைக்குமரியதாக இருக்கின்றது.அவர்களுக்கு ஒரு தொன்னுக்கு இவ்வளவு என்ற அடிப்படையில் மாதாந்தம் செலுத்தவேண்டியிருக்கின்றது. அவ்வாறு பார்க்கின்றபோது ஏறத்தாள.70 மில்லியன் ரூபாக்களை எங்கள் மாநகரசபையிலிருந்து மக்கள் சார்பாக நாங்கள் செலுத்த வேண்டியிருக்கிறது.

ஏதிர்காலத்தில் இவ்வாறு பணம் செலுத்தப்படாமல் நாங்கள் எங்களுக்கென்று கொரியாவிலுமல் ஏனைய வளர்ச்சியடைந்த நாடுகளில் இருப்பது போன்று ஒரு கழிவகற்றுகின்ற அதனை நீக்குகின்ற தொகுதியை இடத்தை நாங்கள் உருவாக்க வேண்டும்.

கேள்வி:-ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பொறுத்தமட்டில் அம்பாறை மாவட்டமானது அதிலும் குறிப்பாக கல்முனை மாநகரம் மரச்சின்னத்தின் ஆணிவேராக இருக்கின்றது.அப்படி இருக்கின்றபோது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏன் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் போட்டியிடுகின்றது.

பதில்;:-யானைச்சின்னத்தில் போட்டியிடுவதென்பது முஸ்லிம் காங்கிஸைப் பொறுத்தமட்டிலும் ஒன்றும் புதிய விடயமல்ல கடந்த பொதுத் தேர்தலில்கூட நாங்கள் யானைச்சின்னத்தில்; போட்டியிட்டதன் காரணமாக தமிழ்,சிங்கள மக்களுடைய வாக்குகளையும் பெற்று முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மூன்று பேரையும் வெற்றியடையச் செய்து அம்பாறை மாவட்டத்தில் 3 ஆசனங்களைப் பெற்றோம்.

கேள்வி:-கல்முனை மாநகரசபையில் ஸ்ரீலங்கா முஷஸ்லிம் காங்கிரஸ் ஆதரவில் ஐக்கியதேசியக் கட்சியின் யாரனச் சின்னத்தில் களமிறக்கப்பட்டிருக்கின்ற வேட்பாளர்களின் வெற்றிவாய்ப்புகள் எவ்வாறு அமையும் என நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்.

பதில்:-கல்முனையைப் பொறுத்தவரையில் நாங்கள் 21ஆசனங்களுக்கு மேல் பெற்று பலமான ஆட்சியை அமைக்கக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது.எனவே மாநகரசபையை நாங்கள் ஏனைய கட்சிகளுடன் எந்தக் கூட்டும் சேராமல் இலகுவாக அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகத் தெளிவாகவே காணப்படுகிறது.வெற்றி வாய்ப்புகள் மிக இலகுவாகவே காணப்படுகிறது என்பதை நான் என்னுடைய நீண்டகால அரசியல் அனுபவத்திலே ஊகித்த அடிப்படையில்; நம்புகின்றேன்.

எனவே முஸ்லிம் காங்கிரஸ் கல்முனை மாநகரை கைப்பற்றவது இலகுவானதொன்றாக இருக்கும் என்பதை நான் தெளிவாகத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

Web Design by Srilanka Muslims Web Team