கல்முனை மாநகர முதல்வர் அவர்களே..! - Sri Lanka Muslim
Contributors

(முஹம்மது காமில்)

கல்முனை மாநகர முதல்வர் பதவியானது பல்வேறு சர்ச்சைகளுக்கும் வாதப்பிரதி வாதங்களுக்கும் இடையில் முன்னாள் மேயர் சிராஸ் மீராசா கிபிடம் இருந்து சிரேஸ்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பருக்கு இரண்டாண்டு திட்டத்தின் அடிப்படையில் கட்சி தலைமையினால் பங்கிட்டு வழங்கப்பட்டது யாவரும் அறிந்ததே.

இருந்த போதிலும் கடந்த காலங்களில் ஏற்ப்பட்ட சம்பவங்கள் இப்பதவி தொடர்பான சர்ச்சைகள் இப்பிரதேச வாழ் சாதாரண குடி மகனையும் சிந்திக்க வைத்துவிட்டது என்பது முற்றிலும் உண்மையே காரணம் இந்த பதவிக்கு கொடுக்கப்பட்ட அதீத முக்கியத்துவமே இச்சந்தர்ப்பத்தில் ஏற்ப்பட்ட பல்வேறுபட்ட அசம்பாவிதங்கள் ,பிரதேசவாத விசம கருத்துக்களுக்கு மத்தியில் சமூகமே பிளவு படுத்தப்படுமோ என்ற தருணத்தில் முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீரசாஹிபின் திடீர் விட்டுக்கொடுப்பு அவரது எதிர்கால அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்ள ஒரு சிறந்த அடித்தளமாக அமையப்போகின்றது என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்தாகும்.

இந்நிலையில் பதவி ஏற்றுள்ளவரும் சாதாரண நபர் இல்லை இலங்கையில் விரல் விட்டு என்ன கூடிய திறமை மிக்க சட்டத்தரணிகளில் ஒருத்தர் அதே நேரம் அடிப்படை போராளியும் முஸ்லிம் காங்கிரஸ் எனும் விருட்ச்சத்தின் ஒரு வேரும் கூட ஆனால் எது எவ்வாறு இருப்பினும் பிரதேச வாழ் மக்களையும் இவரது ஆதரவாளர்களையும் அதேநேரம் முன்னாள் மேயர் இன் ஆதரவாளர்களையும் திருப்பதிப் படுத்த வேண்டிய பொறுப்பும் கடப்பாடும் தற்போது இவர்மேல் தானாகவே சுமத்தப்பட்டு விட்டது.

முன்னாள் முதல்வர் எது செய்தாரோ இல்லையோ அது இப்போது அதை பற்றிய எந்த ஒரு கேள்வியும் எழப்போவது இல்லை ஆனால் தற்போதைய முதல்வர் என்ன செய்கின்றார் என்பதை உற்று நோக்கவும் கேள்வி கேட்கவும் அதை விமர்சனம் செய்யவும் அதன் மூலம் அரசியல் இலாபம் பெறவும் இப்போதே ஒரு கூட்டம் தயார் நிலையில் உள்ளது இதை நிறைவேற்ற தவறும் சந்தர்ப்பத்தில் தற்போதைய முதல்வரின் எதிர்கால அரசியல் இஸ்திரத்தன்மை செல்வாக்கு என்பன குறிப்பிட்ட பிரதேசத்தில் மட்டுப்படுத்தப்பட்டு விடும்.

இப்படிப்பட்ட பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கும் சாவால்களுக்கும் மத்தியில் புதிய முதல்வாராக கடமை ஏற்றிருக்கும் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் அவர்களுக்கு பிரதேசவாழ் பொது மக்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு ஒரு வினயமான வேண்டு கோளையும் விடுக்கின்றோம் அதாவது

எமது கல்முனை பிரதேசம் அபிவிருத்தியை நோக்கி பயணிக்கும் இந்த தருணத்தில் உங்களிடம் நாங்கள் எதிர் பார்ப்பது ஆக்க பூர்வமான பல செயர்ப்படுகளையே தவிர வெறுமனே வீதி அபிவிருத்தியும் பல்வேறுபட்ட கொந்தராத்துகளும் ஏனைய அபிவிருத்திகளும் இல்லை. தற்போதைய நிலையில்  எமது பிரதேசம் மற்றும் சமூகம் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த நவீன நுற்றாண்டில் பயணித்துக்கொண்டு இருப்பதானால் அதற்க்கேற்ற வகையில் எமது மக்களையும் தயார் செய்ய வேண்டிய கடப்பாடு உங்களுக்கும் உள்ளது ஏனெனில் நீங்கள் எமது கல்முனை பிரதேசத்துக்கு இன்னும் இரண்டு வருடங்களுக்கு முடிசூடா மன்னன் உங்களால் இது மட்டுமல்ல இதற்க்கு மேலயும் கண்டிப்பாக செய்ய முடியும் என்ற நம்பிக்கையே.

எமது கல்முனை பிரதேசத்தில் முக்கியமாக எம்மால் அடையாளம் காணப்பட்டு செய்ய வேண்டிய விடயங்களாக பின்வருவனவை பிரதானமாக உள்ளன.

*மக்களின் தொழில் வழிகாட்டல் முயற்ச்சிகளுக்கு ஊக்கு விக்கும் மையங்கள் இல்லை.

* தொழில் சார் கல்வி கற்பதற்கான அரசாங்க நிறுவனங்கள் இல்லை

* இலங்கை திறந்த பலகலைக்கழகத்தின் ஒரு கிளை இல்லை

*பாட சாலை கல்வியை வறுமையின் காரணத்தினால் இடை நிறுத்திய மாணவர்களுக்கான தொழில் வழி காட்டல் நிறுவனங்கள் இல்லை

*சேவை மயப்படுத்த பட்ட அரச தனியார் நிறுவனங்கள் இல்லை

*சிறிய மற்றும் நடுத்தரமான தொழில் சாலைகள் இல்லை

*நவீன வசதிகளுடன் கூடிய ஒரு விளையாட்டு மைதானம் இல்லை

இதனை நிபர்த்தி செய்வது மட்டுமல்லாமல் இது போல இன்னும் எத்தனையோ பல சமூக நல திட்டங்களை உங்களால் ஏற்ப்படுத்திக்கொடுக்க முடியும் ஏனெனில் நீங்கள் சமூக அக்கறை மிக அதிகம் கொண்டவர் என்பதை பல்வேறு சந்தர்ப்பங்களில் உணர்த்தி இருக்கின்றீர்கள். அதுமட்டுமல்ல இதுவும் உங்களுக்குள்ள ஒரு சவாலாகும்.

எமது பிரதேச மக்கள் தொழில் துறைகளில் தற்போதைய நிலையில் பின்தங்கியே நிர்க்கின்றனர் அவர்களின் வாழ்வாதார அபிவிருத்தியும் உங்களது கைகளில்தான் உள்ளது.

அதே நேரம் எமது கல்முனை மாநகர சபை மூலம் கிடைக்கும் கோடிக்கணக்கான பெருமளவு நிதி வெறுமனே வீதி மின் விளக்குகளுக்கு மின்சார பாவனைக்கட்டனமாகவும் ஏனைய கழிவகற்றல் செயர்ப்பாடுகளுக்கு மாத்திரம் பயன்படாது பல்வேறுபட்ட ஆக்கபூர்வமான சமூக நலநோன்பு திட்டங்களுக்கு பயன்பட வழிகோல வேண்டும் ஏனெனில் இது மக்களிடம் இருந்து மக்களுக்காக அறவிடப்படும் வரி இது உரிய வகையில் எமது பிரதேச மக்களுக்கு பயன்படல் வேண்டும்.

அடுத்ததாக கல்முனை மாநகர சபையில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு ஊரையும் அடிப்படையாக கொண்ட அபிவிருத்திக்குளுக்களை (இது தொழில்,கல்வி,கலாசாரம்,அபிவிருத்தி போன்றன ஒழுங்குற வரையமைக்கப்பட்டு )அமைத்தல் வேண்டும் இதில் அப்பிரதேசத்து அரசியல் வாதிகள் மாநகரசபை உறுபினர்களுடன் சமூக சேவகர்கள்,அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள்,ஆசிரியர்கள்,பல்கலைக்கழக மாணவர்களின் பிரதிநிதிகள் மற்றும் ஏனைய துறை சார் நிபுணர்கள் உள்ளடக்கப்பட்டு அப்பிரதேசத்துக்கு தேவையான அபிவிருத்தி திட்டங்கள் கண்டறியப்பட்டு செயல் படுத்தப்படவேண்டும் அல்லது முன்னெடுக்கப்படல் வேண்டும் அப்போது தான் இக்கல்முனை மாநகரம் எதிர்கால சந்ததியினருக்கு பயன்படும் வகையில் அபிவிருத்தியை நோக்கி பயணிக்கும்.

இதை விடுத்து வழமையான அல்லது எமது பிரதேச அரசியல் வாதிகளுக்கு உரித்தான பாணியில் தமது அரசியல் நகர்வுகள் முன் எடுக்கப்படுமாக இருந்தால் எமது இக்கல்முனை பிரதேசத்தை எவராலும் முன்னேற்ற முடியாது. உங்களின் வீழ்ச்சியை எதிர் நோக்கி காத்திருக்கும் மக்களுக்கு வாய்க்கு அவல் கிடைத்த கதையாகிப்போய்விடும்.

மதிப்புக்குரிய கல்முனை மாநகர முதல்வர் அவர்களே!!

பதவி என்பது மக்கள் சூடும் மகுடமே அது தற்போது உங்களது காலடிக்கு வந்துள்ளது உங்களால் அம் மாநகர முதல்வர் பதவிக்கு பெருமையா அல்லது அப்பதவியால் உங்களுக்கு பெருமையா என்று பொறுத்து இருந்து பார்ப்போம் எல்லாவற்றிற்கும் காலம் பதில் சொல்லும்.

எல்லாம் வல்ல இறைவன் எமது பிரதேச அபிவிருத்திக்கும் மக்களின் அபிவிருத்திக்கும் உந்து சக்தி வழங்கி அருள் புரிவானாக…!!

Web Design by Srilanka Muslims Web Team