கல்முனை மேயருக்கு ஆதரவாக சாய்ந்தமருதில் சுவரொட்டிகள்! - Sri Lanka Muslim

கல்முனை மேயருக்கு ஆதரவாக சாய்ந்தமருதில் சுவரொட்டிகள்!

Contributors

கல்முனை மேயர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் பதவி விலகக் கூடாதென நேற்று வெள்ளிக்கிழமை காலையில் சாய்ந்தமருது பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதை காணக்கூடியதாக இருந்தது.

கல்முனை மேயர் பதவியிலிருந்து சிராஸ் மீராசாஹிப்பை இராஜினாமா செய்யுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கடந்த செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையிலேயே பிரதி மேயர் நிசாம் காரியப்பருக்கு எதிரான வாசகங்களுடன் சில சுவரொட்டிகளும் மேயர் பதவி விலகக்கூடாது என்ற வாசகங்களடன் சில சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இதே வேளையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு சில மணித்தியாலயங்களில் அவை கிழிக்கப்பட்ட நிலையிலும் காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.lw

a13

 

 

Web Design by Srilanka Muslims Web Team