கல்முனை மேயர் விவகாரம் - ரவூப் ஹக்கீமை சந்திக்கிறார்கள் பள்ளிவாசல் பிரதிநிதிகள் - Sri Lanka Muslim

கல்முனை மேயர் விவகாரம் – ரவூப் ஹக்கீமை சந்திக்கிறார்கள் பள்ளிவாசல் பிரதிநிதிகள்

Contributors

கல்முனை மாநகர முதல்வர்  விடயம் தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம்  எடுத்திருக்கின்ற முடிவு தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை  சாய்ந்தமருது  நம்பிக்கையாளர்  சபையினர்   தலைவர் ரவூப் ஹக்கீமை  சந்திப்பதற்கு நேரம்  ஒதிக்கியுள்ளதாக  நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .

முதல்வர் தொடர்பான பிரகடன அறிக்கை மற்றும் அங்கு தெரிவிக்கப் பட்ட கருத்துக்கள் என்பன  நம்பிக்கையாளர் சபயிடமே ஒப்படைக்கப் பட்டுள்ளது. இன்று  ரவுப் ஹக்கீமை அவர்கள் சந்திக்கவிருந்தும்  ஞாயிற்றுக்கிழமை இந்த சந்திப்புக்கு நேரம் ஒதுக்கப் பட்டுள்ளது .இதனிடையே தலைவரின் அதிரடி அறிவிப்பானது சாய்ந்தமருதில் ஒருவகை அமைதியற்ற நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது

தேர்தலில் அதிக விருப்பு வாக்குப் பெற்றும்  முதல்வர் பதவி சாய்ந்தமருதுக்கு மக்களால்  போராடி பெறப்பட்டது. அதனை மீள வழங்க  மக்களே  தீர்மானிப்பர்  என்ற அடிப்படையில்  நம்பிக்கையாளர் சபை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவத்தை  சந்தித்து  பேசியதன் பின்னர் இதற்கான மாற்று நடவடிக்கையினை  சாய்ந்தமருது மக்கள் எடுப்பார்கள் என  முஸ்லிம் காங்கிரஸ் முக்கியமான அரசியல் பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்

Web Design by Srilanka Muslims Web Team