கல்முனை விகாரையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்து உண்மைகளை மறைத்த பிக்குவுக்கு விளக்கமறியல்! - Sri Lanka Muslim

கல்முனை விகாரையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்து உண்மைகளை மறைத்த பிக்குவுக்கு விளக்கமறியல்!

Contributors

கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விஹாரையொன்றில் வைத்து 3 இளம் பிக்குகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட பௌத்த மதகுருவை, எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கல்முனை நீதவான் நீதிமன்றம், நேற்று முன்தினம் (13) உத்தரவிட்டுள்ளது.

குறித்த விஹாரையொன்றில் புதிதாக இணைந்த 3 இளம் பிக்குகள் திடீர் சுகயீனமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு,  கல்முனை ஆதார வைத்தியசாலையில் கடந்த ஓகஸ்ட் மாத இறுதிப் பகுதியில் இளம் பிக்குகளின் பெற்றோர்களால் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

பின்னர், வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியின் ஆலோசனைக்கமைய, அம்பாறை பொது  வைத்தியசாலையிலுள்ள பிக்குகளுக்கான தனியான சிகிச்சைப் பிரிவுக்கு 3 இளம் பிக்குகளும் வைத்திய பரிசோதனைக்காக மாற்றப்பட்டனர்.

இந்நிலையில், 3 இளம் பிக்குகளும் தாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் தலைமை பௌத்த துறவியினால் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு ஆளாகியதாகக் குறிப்பிட்டிருந்தனர்.

இதனை சட்ட வைத்திய அதிகாரியும் தனது வைத்திய அறிக்கையூடாக  அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பௌத்த மதகுருவைக் கைது செய்ய பொலிஸாரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

எனினும், இந்த விடயங்கள் பொய்யென்றும், குறித்த செய்தியை வெளியிட்ட ஊடகவியலாளருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், அவரால் தமக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளதாகவும் குறித்த தேரர் ஊடகங்களுக்கு அண்மையில் தெரிவித்திருந்த நிலையிலையே, தற்போது கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team