கல்முனை ஸாஹிராக் கல்லூரி இன்று வழமைக்கு திரும்பும் - 'மகா சபை'யும் உருவாக்கம் - Sri Lanka Muslim

கல்முனை ஸாஹிராக் கல்லூரி இன்று வழமைக்கு திரும்பும் – ‘மகா சபை’யும் உருவாக்கம்

Contributors

கல்முனை ஸாஹிராக் கல்லூரியில் அண்மையில் இடம்பெற்று ஊடகங்களின் மூலம் பிரசித்தி பெற்ற அசம்பாவிதம் குறித்ததும், பாடசாலையின் அபிவிருத்தி தொடர்பானதுமான மிக முக்கிய கலந்துரையாடல் ஒன்று (11.03.2013) மாலை 4.30 மணியளவில் கல்லூரியின் காரியப்பர் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

கல்லூரியின் பதில் அதிபரும், தற்போதைய தொழிற்படு அதிபருமாயுள்ள M.S.M.ஹம்சா ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு கல்லூரியின் பழைய மாணவர் சங்க தாய்ச் சங்கத்தின் செயலாளர் Dr.ரியாஸ், கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் தலைவர் Dr. சநூஸ் காரியப்பர், கல்லூரியின் பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் ரிசாத் ஷெரீப், கல்முனைக்குடி ஜும்மா பெரிய பள்ளிவாயில் தலைவர் Dr.அஸீஸ் , சாய்ந்தமருது-மாளிகைக்காடு ஜும்மா பெரிய பள்ளிவாயில் நிருவாகசபை உறுப்பினர்கள், சாய்ந்தமருது பிரதேசசபை செயலாளர் ALM சலீம், கல்முனை அஷ்ரஃப் நியாபகார்த்த வைத்தியசாலையின் தலைமை வைத்தியர் Dr.ALM நசீர், சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் தலைமை வைத்தியர் Dr. ஆரிப், கல்லூரியின் முன்னாள் அதிபர்களான KL. அபூபக்கர் லெப்பை மற்றும் திருமதி,SHMMA காதர் , கல்முனைக்குடி, சாய்ந்தமருது வர்த்தக சங்க பிரதிநிதிகள், மீனவர் சங்க பிரதிநிதிகள், வைத்தியர்கள், பொறியிலாளார்கள், சட்டத்தரணிகள், கல்வியியலாளர்கள், பழைய மாணவர்கள் கல்லூரியின் உப அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட முக்கிய பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்வில் கடந்த 29.10.2013 அன்று நடைபெற்ற அசம்பாவிதம் குறித்த விளக்கம் அளிக்கப்பட்டதோடு, பாடசாலையின் நிருவாகசபை மற்றும் ஆசிரியர்களின் சார்பாக ஆசிரியர் சங்கச் செயலாளர் A. ஆதம்பாவா ஆசிரியாரினால் மிக முக்கிய 7 அம்ச கோரிக்கை ஒன்று சமர்பிக்கப்பட்டு, அக்கோரிக்கயினை நிறைவேற்றித்தர சமூகமளித்த பிரமுகர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக 3 மணி நேரங்கள் இடம்பெற்ற கலந்துரையாடலின் இறுதியில் பாடசாலை சமூகத்தினால் சமர்பிக்கப்பட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள சபையிலுள்ள அனைவரும் ஏகமனதாக உடன்பட்டதோடு, இந்த தீர்மானங்களை நிறைவேற்றவும், இன்னும் பல கல்லூரி தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு பெறவும், உடனடியாக அமுலாகும் வகையில் சமூகத்தின் அனைத்துப் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய வகையில் கல்லூரியின் “மகா சபை” ஒன்று உருவாக்கப்பட்டது. இப்புதிய மகாசபையின் தலைவராக கல்லூரியின் முன்னாள் அதிபர் KL . அபூபக்கர் லெப்பை தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

அத்தோடு (2013.11.04) திங்கட்கிழமை தொடக்கம் கல்லூரி சுமுகமாக இடம்பெறுவும் எனவும், கல்லூரியின் ஆசிரியர்கள் அனைவரும் மிக கவனத்தோடு கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவர் எனவும் கல்லூரியின் ஆசிரியர் சங்கச் செயலாளர் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Web Design by Srilanka Muslims Web Team