கல்வியில் முன்னேறுவதிலேயே இலங்கை முஸ்லிம்களின் இருப்பு தங்கியுள்ளது - தூதுவர் இப்ராஹிம் அன்சார் » Sri Lanka Muslim

கல்வியில் முன்னேறுவதிலேயே இலங்கை முஸ்லிம்களின் இருப்பு தங்கியுள்ளது – தூதுவர் இப்ராஹிம் அன்சார்

ibrahim

Contributors
author image

Editorial Team

கேள்வி: மூன்று வருட பத­விக்­கா­லத்தில் இலங்கை – மலே­ஷி­யா­வுக்­கான உறவு எப்­படி அமைந்­தி­ருந்­தது?
இரு நாடு­க­ளுக்­கி­டை­யிலும் உறவு மிகவும் நெருக்­க­மா­கவே இருந்து வரு­கி­றது. 1957 ஆம் ஆண்டு மலே­ஷியா சுதந்­திரம் பெற்­றது. இப்­போது 60 வரு­டங்கள் பூர்த்­தி­யான நிலையில் இருக்­கி­றது. அண்­மைக்­கா­லத்­தி­லி­ருந்து வர்த்­த­கத்­துறை உறவும் கூட மிகவும் வேக­மாக வளர்ந்து வரு­கி­றது. இரு நாடு­களும் எடுத்துக் கொண்ட முயற்­சி­களின் கார­ண­மாக முதன்மை முத­லீட்­டா­ளர்கள் பலர் இங்கு வரு­வ­தற்கு ஆர்வம் காட்டி வரு­கி­றார்கள்.

இரு­நாட்டு அர­சாங்­கங்­களும் இணைந்து உரு­வாக்­கிய கூட்டு ஆணைக்­குழு 2006 ஆம் ஆண்டு முதன் முத­லாக இலங்­கையில் கூடி­யது. அதில் வர்த்­தகம் மட்­டு­மன்றி அர­சியல், வேலை­வாய்ப்பு விட­யங்கள் தொடர்­பான பல உடன்­ப­டிக்­கைகள் நிறை­வேற்­றப்­பட்­டன.

ஒவ்­வொரு வரு­டமும் நடை­பெ­ற­வேண்­டிய இந்த கூட்டு ஆணைக்­குழு 2007 இல் மலே­ஷி­யாவில் நடை­பெற வேண்­டி­யி­ருந்தும் மலே­ஷியா அவ்­வாறு நடத்த முன்­வ­ராத நிலையில் 7 ஆண்­டுகள் காலம் கடந்து 2013 ஒக்­டோ­பரில் தான் எனது முயற்­சியால் இலங்­கையில் நடத்த முடிந்­தது.

கேள்வி: இந்த வர்த்­தக மாநாட்டின் பிர­தி­ப­லன்கள் எவ்­வாறு அமைந்­தன?
இரு நாடு­களின் அர­சியல், பொரு­ளா­தாரம், வர்த்­தகம் உள்­ள­டங்­க­லாக ஐந்து உடன்­ப­டிக்­கைகள் கைச்­சாத்­தி­டப்­பட்­டன. இரு நாடு­களின் வர்த்­தக முத­லீ­டு­களைப் பெருக்கிக் கொள்­ளவும் சுற்­றுலாப் பய­ணத்­து­றையை விரி­வு­ப­டுத்திக் கொள்­ளவும் இதன் மூலம் நிறைய வாய்ப்­புகள் ஏற்­ப­டுத்திக் கொள்­ளப்­பட்­டன.

கேள்வி: இதன்­பின்னர் தொடர்ந்தும் வரு­டந்­தோறும் இத்­த­கைய நிகழ்­வுகள் இடம்­பெற்­ற­னவா?
2014 ஆம் ஆண்டு மலே­ஷி­யாவில் கோலா­லம்­பூரில் சுற்­றுலா கலா­சார மாநாடு ட்ரவல் மால்ட்டா மாநாடு என்ற பெயரில் நடத்­தப்­பட்­டது. உலகில் பல நாடு­களில் இருந்தும் பெரு­வா­ரி­யான வர்த்­தக நிறு­வ­னங்கள் இதில் பங்­கு­பற்­றின. இலங்­கை­யி­லி­ருந்தும் எட்டு வர்த்­தக நிறு­வ­னங்கள் இதில் கலந்து கொண்­டன.

அதன் பின்னர் கடந்த வருடம் செப்­டெம்பர் மாதம் தெள­தாபார் எனும் நகரில் ட்ரவல் மால்ட்டா மாநாடு இடம்­பெற்­றது. இதில் இங்­கி­ருந்து 17 வர்த்­தக நிறு­வ­னங்கள் கலந்து கொண்­டன. கடந்த 2014 இல் எட்­டாக இருந்­தது 2015 இல் 17 ஆக அதி­க­ரிக்­கப்­பட்­டமை எமது முயற்­சியின் முன்­னேற்­றத்­தையும் வெற்­றி­யை­யுமே பிர­தி­ப­லிக்கச் செய்­கின்­றது. முன்­னைய வருடம் ஒரு பில்­லியன் ரூபா­வாக இருந்த முத­லீ­டுகள் 2015 இல் இரண்டு பில்­லி­யன்­க­ளாக அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன.

கேள்வி: இத்­த­கைய வளர்ச்சி உங்­க­ளுக்குத் திருப்தி தானே?
இத்­த­கைய அதி­க­ரிப்­புகள் மட்­டு­மல்ல 19 வரு­டங்­க­ளுக்குப் பின்னர் இந்த வருடம் மலே­ஷி­யாவின் அழைப்பை ஏற்று இலங்­கையின் உயர் மட்டத் தலை­வர்கள் அங்கு விஜயம் செய்து இரு நாட்டு பல்­துறை உற­வு­க­ளையும் மேலும் வலுப்­ப­டுத்திக் கொண்­டமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

இதற்­காக நாம் ஒரு வரு­ட­மாக பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­பட்டே இதனைச் சாதித்துக் கொண்டோம். எமது ஜனா­தி­பதி, பிர­த­மரின் இத்­த­கைய விஜயம் எமக்குப் பெரு­மையைத் தரு­கி­றது.

2011 ஆம் ஆண்டு இலங்­கையில் மாநாடு நடத்­தக்­கூ­டாது என்று பல நாடுகள் கோரிக்கை விடுத்த போதும் அந்தச் சந்­தர்ப்­பத்­திலே மலே­ஷி­யாதான் இலங்­கையில் நடத்த ஆத­ரவு தெரி­வித்­தி­ருந்­தது.

அப்­போ­தி­ருந்தே இரு நாடு­க­ளுக்­கு­மான உறவு இருந்து வந்­தி­ருக்­கி­றது.
2017 இல் மலே­ஷியப் பிர­தமர் நஜீப் மற்றும் புதிய மன்னர் 5 ஆவது சுல்­தானும் இலங்கை வர இருப்­பது எமது இரு தரப்பு முயற்­சி­க­ளுக்கும் கிடைத்த பெரு வெற்­றி­யாகும்.

கேள்வி: வர்த்­தக, அர­சியல் உற­வோடு கலா­சார உறவு எந்­த­ளவு இரு நாடு­க­ளி­டை­யேயும் வளர்ந்­துள்­ளது?
இலங்கை பௌத்­தர்­களைப் பெரும்­பான்­மை­யாகக் கொண்­டுள்ள நாடு. மலே­ஷி­யாவில் முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யாக உள்­ளனர். ஆனால் கலா­சார ரீதி­யாக இரு நாடு­க­ளுக்கும் நீண்­ட­கால வர­லா­றுண்டு. மலே­ஷி­யாவில் 19 வீத­மான பௌத்த மக்­களும் 7 வீத­மான தமிழ் மக்­களும் வாழ்ந்து வரு­கி­றார்கள்.

அதே­போன்று இலங்­கையில் பெரும்­பான்­மை­யாக பௌத்­தர்­களும் அதற்­க­டுத்த நிலையில் தமி­ழர்­களும் முஸ்­லிம்­களும் முறையே வாழ்­கின்­றனர். இரு நாடு­க­ளிலும் சிறு­பான்மை இனத்­த­வர்­களின் மத, கலா­சார சுதந்­தி­ரங்கள் நல்ல முறை­யிலே நிலவி வரு­வதைக் காண்­கிறோம்.

கேள்வி : இலங்­கையில் மத அடிப்­ப­டை­வாதம் மேலோங்கி வரு­வ­தாகக் கூறப்­ப­டு­கி­றதே?
இலங்­கையில் அடிப்­ப­டை­வாதம் இருப்­பதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. சகல இன, மதத்­த­வர்­களும் அவ­ரவர் மத, கலா­சா­ரங்­களைப் பின்­பற்­றக்­கூ­டிய உரிமை வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

இலங்­கையில் முஸ்­லிம்கள் நாட்டில் நாலா பக்­கங்­க­ளிலும் பரந்து வாழ்­கி­றார்கள். பெரும்­பான்மை இனத்­த­வர்­க­ளுடன் இரண்­டறக் கலந்து வாழ்­கி­றார்கள். அங்­கெல்லாம் மத, கலா­சா­ரத்தைப் பேணி நடப்­ப­தற்கு எத்­த­கைய தடை­களும் இல்லை.

எந்த அர­சாங்கம் மாறி மாறி வந்­தாலும் கூட மத சுதந்­திரம் வழங்­கப்­பட்டுக் கொண்டே இருக்­கி­றது. நோன்பு காலத்தில் முஸ்லிம் பாட­சா­லை­க­ளுக்கு விடு­முறை வழங்­கப்­ப­டு­கி­றது.

முஸ்­லிம்கள் தமிழைத் தாய் மொழி­யாகக் கொண்­டி­ருக்­கி­றார்கள். ஆனாலும் கலா­சா­ரத்தை விட்டுக் கொடுக்­காது வாழ்­கி­றார்கள். எனவே அடிப்­ப­டை­வாதம் உரு­வாக வழியே இல்லை.

கேள்வி : இலங்கை முஸ்­லிம்கள் எந்த விட­யத்தை முன்­னெ­டுக்க வேண்டும் என்று கரு­து­கி­றீர்கள்?
கல்­விக்­குத்தான் முன்­னு­ரிமை கொடுக்க வேண்டும். கல்வி ஒன்­றினால் தான் சகல துறை­க­ளிலும் கால்­ப­திக்க முடியும். இலங்­கையில் 1970 க்குப் பின்னர் தான் முஸ்­லிம்­களின் கல்­வியில் ஒரு திருப்­பு­முனை ஏற்­பட்­டது.

அப்­போது கல்வி அமைச்­ச­ராக இருந்த கலா­நிதி பதி­யுதீன் மஹ்மூத் முஸ்­லிம்­களின் கல்வி விருத்­தியில் அப­ரி­மி­த­மான பங்­க­ளிப்புச் செய்தார். அவ­ரது காலத்­தி­லேயே முஸ்லிம் பாட­சா­லைகள் பலவும் எழுச்சி பெற்­றன. முஸ்லிம் ஆசி­ரி­யர்கள் பலர் நிய­மனம் பெற்­றனர். இதன்­மூலம் முஸ்­லிம்கள் தொழில்­வாய்ப்­பு­களை பெறக்­கூ­டிய நிலையும் உரு­வா­கி­றது.

கேள்வி: நீங்கள் புத்­தி­ஜீ­வி­யாக இருக்­கி­றீர்கள். இந்­நி­லையில் தற்­போது முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்டம் குறித்து எழுந்­துள்ள சர்ச்சை குறித்து உங்கள் கருத்து என்ன?
தற்­போது நடை­மு­றை­யி­லுள்ள திரு­மணச் சட்­டத்­தி­லுள்ள விட­யங்­களைத் திருத்­து­வதில் தவ­றில்லை. குறித்த கட்­டத்தில் திருப்­தி­யற்ற விட­யங்­களில் மாற்றம் கொண்டு வரலாம்.

ஆனால் ஷரீஆ சட்டம் வேண்டாம் என்று கூற­வில்­லையே. திருத்தம் தானே செய்யக் கோரப்­பட்­டி­ருக்­கி­றது. 12 வயது திரு­மண வயதைத் தேவைக்­கேற்­ற­படி கூட்­டிக்­கொள்­ளலாம். பிரச்­சி­னையைச் சரி­யாகப் புரிந்து கொள்ளாமையாலே தான் ஒரு சிலர் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்.

விவாகம், விவாகரத்து சட்டம் மற்றும் வாரிசுரிமைச் சட்டம் இவை இரண்டும் தான் முஸ்லிம்களுக்காக தனியான சட்டமாக உள்ளது. மற்ற ஏனைய குற்றவியல் சட்டங்கள் யாவும் நாட்டிற்குப் பொதுவாக உள்ளவையாகும். இவற்றை முஸ்லிம்கள் பின்பற்றவே செய்கிறார்கள்
.
தனியார் சட்டமாக விளங்கும் மேற்கண்ட இரண்டு சட்டவிதிகளிலும் சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப மாற்றம், திருத்தங்களைச் செய்வதில் தவறில்லை. பொதுவாக இந்நாட்டில் முஸ்லிம்கள் முஸ்லிமாக வாழும் சூழ்நிலை இருக்கவே செய்கிறது.

தொழுவதற்கும், நோன்பு நோற்பதற்கும் தடை விதிக்கவில்லையே.

(நன்றி விடிவெள்ளி)

Web Design by The Design Lanka