கல்வி நிர்வாக சேவை தரம் III இற்கு 488 பேரைத் தெரிவு செய்ய ஏற்பாடு. - Sri Lanka Muslim

கல்வி நிர்வாக சேவை தரம் III இற்கு 488 பேரைத் தெரிவு செய்ய ஏற்பாடு.

Contributors

இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் III க்கு 2013/2014 இல் ஆளணித் தெரிவில் 488 பேர்
தெரிவு செய்யப்படவுள்ளனர் .தெரிவுகள் திறந்த நிலை போட்டிப் பரீட்சை , மட்டுப்படுத்தப்பட்ட நிலை போட்டிப் பரீட்சை , சேவை மூப்பு திறமை அடிப்படை என்ற மூன்று வகைப்பகுதிகளில் மேற்கொள்ளப்படவுள்ளன .
திறந்த நிலை போட்டிப் பரீட்சை மூலம் 122 பேரும் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை _ நேர்முகப் பரீட்சை மூலம் 146 பேரும் இலங்கை அதிபர் சேவை தரம் நான் இல் இருந்து சேவை மூப்பு திறமை அடிப்படையில் 220 பேரும் தெரிவு செய்யப்படவுள்ளனர் .
தெரிவுக்கான போட்டிப் பரீட்சைகள் நடைபெற்று முடிவடைந்திருப்பதால் தெரிவுகள் அடுத்த வருட முற்பகுதியில் இறுதி முடிவு செய்யப்பட்டு நியமனம் வழங்கப்படலாம் எனக் கூறப்படுகின்றது .
இந்தமுறை மட்டுப்படுத்தப்பட்ட நிலை போட்டிப் பரீட்சை , நேர்முகப் பரீட்சை தெரிவு செய்யப்படுபவர்களுக்கும் ஒரு வருட முழுச் சம்பளத்துடன் கூடிய படிப்பு விடுமுறையில் பயிற்சி வழங்கப்பட்ட பின்னரே பணியில் அமர்த்தப்படவுள்ளனர் .
திறந்த நிலைப் போட்டிப் பரீட்சைகள் மூலம் தெரிவு செய்யப்படுபவர்களுக்கும் மட்டுப்படுத்தப்பட்ட நிலைப் போட்டிப் பரீட்சை , நேர்முகப் பரீட்சை மூலம் தெரிவு செய்யப்படுபவர்களுக்குமான பயிற்சி ஜனவரி மாதம் பிற்பகுதியில் ஆரம்பிக்கலாம் எனக் கூறப்படுகின்றது . ஆகையால் அதற்கு முன்னரே நியமனம் வழங்கப்படவுள்ளது .
கடந்த முறை 410 பேருக்கு கல்வி நிர்வாக சேவை நியமனம் வழங்குவதற்கு ஆளணி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த போதிலும் போட்டிப் பரீட்சையில் உரிய வெட்டுப்புள்ளியைப் பெறத் தவறியமையால் 210 பேர் மாத்திரமே நியமனம் பெற்றிருந்தனர் .
இந்த வருடம் நியமனத் தொகையை அதிகரிப்பதற்கு வசதியாக போட்டிப் பரீட்சையில் பாட ரீதியிலான சித்திக்கான புள்ளி 60 இலிருந்து 40 புள்ளியாகக் குறைக்கப்பட்டுள்ளது .

Web Design by Srilanka Muslims Web Team