கள்ளக்காதலுக்காக கணவனையும் பிள்ளைகளையும் கொலை செய்த பெண் கைது - Sri Lanka Muslim

கள்ளக்காதலுக்காக கணவனையும் பிள்ளைகளையும் கொலை செய்த பெண் கைது

Contributors

திருச்சி ஸ்ரீரங்கம் அருகே உள்ள திருவானைக்காவல் அகிலேண்டேஸ்வரி நகரை சேர்ந்தவர் யமுனா (வயது 45). இவரது மகன் செல்வகுமார் (20), மகள் சத்யா (22) ஆகியோர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டு புலிவலம் அருகே வீசப்பட்டனர்.

ஸ்ரீரங்கம் மங்கம்மா நகரை சேர்ந்த சாமியார் கண்ணன் என்பவருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் தொடர்பால் சாமியாருடன் சேர்ந்து யமுனாவே மகன், மகள் என்றும் பாராமல் அவர்களை கொலை செய்து வீசியது தெரிய வந்தது.

இதுதொடர்பாக திருச்சி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அழகசேன், புலிவலம் இன்ஸ் பெக்டர் நடேசன், ஜீயபுரம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தப்பி ஓடிய சாமி யார் கண்ணன், யமுனா, இவரது தாய் சீதாலட்சுமி (75) ஆகியோரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் 10 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் காலை அகிலாண்டேஸ்வரி நகர் வீட்டிற்கு வந்த யமுனா மற்றும் அவரது தாய் சீதா லட்சுமி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இருவரையும் ரசிகய இடத்தில் வைத்து 2 நாட்கள் விசாரணை நடத்தினர்.

அப்போது குடும்ப பிரச்சினை தீர்க்க வீட்டிற்கு குறி சொல்ல வந்த சாமியார் கண்ணனுக்கும் தனக்கும் 10 வருடத்திற்கு முன்பு கள்ளக்காதல் ஏற்பட்டதாகவும், இதை தட்டிக்கேட்ட கணவர் தங்கவேலுவை 10 வருடத்திற்கு முன்பே சாமியார் கண்ணனுடன் சேர்ந்து கொலை செய்ததாகவும் யமுனா கூறினார்.

தொடர்ந்து சாமியார் கண்ணனுடன் இருந்த கள்ளத்தொடர்பை மகன் செல்வகுமார் கண்டித்ததாலும், சாமியாருடன் சேர்ந்து ரூ.4 கோடி ரூபாய் மதிப்புள்ள அகிலாண்டேஸ்வரி நகர் வீட்டை விற்க எதிர்ப்பு தெரிவித்ததாலும் செல்வகுமாரை கடந்த மாதம் 24–ந் திகதி கொலை செய்து வீசி விட்டதாகவும் கூறினார். மகன் செல்வகுமார் கொலை குறித்து மகள் சத்யாவிற்கு தெரிய வந்ததும் அவள் போலீசில் காட்டி கொடுக்க போகிறேன் என கூறியதால் கடந்த 14–ந் திகதி சத்யாவையும் சாமியார் கண்ணனுடன் சேர்ந்து கொலை செய்து வீசி விட்டதாக யமுனா தெரிவித்தார்.

2 நாட்கள் விசாரணைக்கு பிறகு புலிவலம் இன்ஸ்பெக்டர் நடேசன் மற்றும் போலீசார் இன்று காலை யமுனா மற்றும் அவரது தாய் சீதாலட்சுமி ஆகியோரை போலீஸ் வேனில் ஏற்றி துறையூர் மாஜிஸ்திரேட்டு ஸ்தோத்திரம் மேரியிடம் ஆஜர்படுத்தினர்.

இருவரையும் 15 நாள் காவலில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து போலீசார் இருவரையும் திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள பெண்கள் மத்திய சிறைக்கு கொண்டு வந்து அடைத்தனர். தொடர்ந்து சாமியார் கண்ணன் தலைமறைவாக உள்ளார். அவரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

Web Design by Srilanka Muslims Web Team