கழுதை என திட்டிய கணவர் மீது பெண் வழக்கு -சவுதி அரேபியாவில் சம்பவம் - Sri Lanka Muslim

கழுதை என திட்டிய கணவர் மீது பெண் வழக்கு -சவுதி அரேபியாவில் சம்பவம்

Contributors

-ஜெட்டா-

பொது இடங்களில், பலர் முன்னிலையில், மாடு, கழுதை என, திட்டிய கணவன் மீது, சவுதி பெண் வழக்கு தொடர்ந்துள்ளார். எண்ணெய் வளம் மிக்க சவுதி அரேபியாவில், பெண்களுக்கு இன்னும் போதிய உரிமைகள் அளிக்கப்படவில்லை.

 

 

கார் ஓட்டக்கூட அவர்களுக்கு அனுமதி கிடையாது. இதற்கிடையே இந்த நாட்டை சேர்ந்த ஒரு பெண், நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிடுகையில், ‘என் கணவர், பொது இடங்களில், என்னை மாடு, கழுதை என்றும் தகாத வார்த்தைகளால் அழைத்து அவமானப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். எனவே அவருக்கு தண்டனை அளிக்க வேண்டும்’ என்றார்.

 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவரை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் படி உத்தரவிட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team