காங்கிரஸ், எம்.எல்.ஏ.வின் செக்ஸ் வீடியோ! - மத்திய பிரதேச தேர்தல் களத்தில் பரபரப்பு. - Sri Lanka Muslim

காங்கிரஸ், எம்.எல்.ஏ.வின் செக்ஸ் வீடியோ! – மத்திய பிரதேச தேர்தல் களத்தில் பரபரப்பு.

Contributors

சட்டசபை தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள மத்திய பிரதேசத்தில், காங்கிரஸ், எம்.எல்.ஏ.,வின், செக்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது, வாக்காளர்களை உஷ்ணப்படுத்தியுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள, ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வை சேர்ந்த, முதல்வர், சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான, மத்திய பிரதேசத்தில், நவம்பர், 25ல் தேர்தல் நடக்கிறது. சவுகானை வீழ்த்தி, ஆட்சியை கைப்பற்றி விட துடிக்கும் காங்கிரஸ், அதற்காக விறுவிறுப்பான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. ஆனால், காங்கிரசின் வெற்றி வாய்ப்பை சீர்குலைக்கும் வகையில், காங். எம்.எல்.ஏ., சத்யநாராயண் படேலின், செக்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.

பெண் ஒருவருடன், எம்.எல்.ஏ., சத்யநாராயண் உல்லாசமாக இருக்கும் வீடியோ, இணைய தளங்களில், கடந்த இரண்டு நாட்களாக உலா வந்தன.சொந்தமாக ஹெலிகொப்டர் வைத்துள்ள, பெரும் பணக்காரரான சத்யநாராயணா, அந்தப் படம், என்னுடையது அல்ல; முகத்தை மாற்றி வைத்துள்ளனர்; பா.ஜ., அல்லது அரசியல் எதிரி, ஜெகதீஷ் படேலின் கைவேலையாக இருக்கலாம் என கூறுகிறார். ஆனால், இதை, பா.ஜ., மற்றும் ஜெகதீஷ் படேல் மறுத்துள்ளனர்.

செக்ஸ் வீடியோ குறித்து, சத்யநாராயணா, இந்தூர் போலீசில் புகார் அளித்தார். போலீஸ் விசாரணையில், நேற்று, மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரகசிய இடத்தில் அவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது. அதில், உண்மை வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Web Design by Srilanka Muslims Web Team