பாலஸ்தீனத்திற்கு 200 மில்லியன் ரியால்களை வழங்கும் சவூதி - Sri Lanka Muslim

பாலஸ்தீனத்திற்கு 200 மில்லியன் ரியால்களை வழங்கும் சவூதி

Contributors

-ரஸ்னா மனாப்-

இரண்டு இறையில்லங்களின் பாதுகாவலரான மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஸீஸ் அல் சௌத் அவர்கள் 200 மில்லியன் சவூதி ரியால்களை (53 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) பாலஸ்தீனத்திற்கு வழங்கும்படி உத்தரவிட்டுள்ளதாக சவூதி அரேபியாவின் நிதியமைச்சர் இப்ராஹீம் அல் அஸாப் அவர்கள் அறிவித்துள்ளதாக குவைத் செய்தி நிறுவனமான “குனா” தகவல் வெளியிட்டுள்ளது.

 

இஸ்ரேலின் தாக்குதலின் காரணமாக காயத்தினால் பாதிக்கப்பட்டு அவதியுறும் நோயாளிகளின் மருத்துவ தேவைகளுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது கையளிக்கப்படும் இந்த நிதியினை கொண்டு பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு முடிந்தளவு நிவாரணம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

இஸ்ரேலின் மிலேச்சத்தனமான தாக்குதலில் இதுவரையில் 170 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தும் 17000 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் இடம்பெயர்ந்தும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team