காதலுடன் ஓடிப்போன சவூதிப்பெண்ணுக்கு UNHCR தஞ்சம் வழங்கியுள்ளது. - Sri Lanka Muslim

காதலுடன் ஓடிப்போன சவூதிப்பெண்ணுக்கு UNHCR தஞ்சம் வழங்கியுள்ளது.

Contributors

(தமிழில் ஏ.எம்.அல்பிஸ்)
காதலுடன் ஓடிப்போன சவூதிப்பெண்ணுக்கு UNHCR  தஞ்சம் வழங்கியுள்ளது.
கடந்த மாதம் ஹூதா என அழைக்கப்பட்ட சவூதிப் பெண் ஒருவர் சட்டவிரோதமாக தனது யெமன் காதலுடன் சவூதியை விட்டு ஓடிச்சென்றிருந்திருந்தார்.
அப் பெண்ணுக்கு கடந்த ஞாயிறு அன்று (UNHCR ) ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையாளரால் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளது.
ஒரு மனிதாபிமான அடிப்படையில்அந்தப் பெண்ணுக்கு தஞ்சம் அளித்துள்ளதாக UNHCR ஆல் யெமன் ஊடகம் ஒன்றுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப் பெண் சவூதியரேபியாவில் நடைபெறவிருந்த தனக்கு விருப்பமற்ற கட்டாய திருமணத்திலிருந்து தப்புவதற்காகவும் யெமன் காதலனை திருமணம் முடிப்பதற்காக நாட்டைவிட்டு வெளியேறியதாக கூறப்பட்டுள்ளது.
அப் பெண் தங்குவதற்கும் மற்றும் காதலனை திருமணம் செய்வதற்கும் சிலர் அப்பெண்ணுக்கு ஆதரவாக கோசம் எழுப்பியதோடு ஹூதாவின் தஞ்சம் வழங்கப்பட்ட செய்தியைத் தொடர்ந்து இரண்டு பழங்குடி தலைவர்கள் அப்பெண்ணுக்கு அன்பளிப்புக்களாக இரண்டு முடிச்சுக்களை வழங்கினர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team