காதல் தோல்வியால் 15வயது மாணவி தற்கொலை - Sri Lanka Muslim
Contributors

காதல் தோல்வியால் மனமுடைந்த பாடசாலை மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வரக்காபொல – உடபாகே – தொரவக்க பிரதேசத்தில் இச்சம்பவம் நேற்று (09) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலை கழுத்துப் பட்டியை பயன்படுத்தி குறித்த மாணவி தூக்கிட்டுக் கொண்டுள்ளார்.

வரக்காபொல பிரதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 15 வயதான மாணவியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்வதாக மாணவியால் எழுதப்பட்ட கடிதம் ஒன்று வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சடலம் குருநாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை இன்று (10) இடம்பெறவுள்ளது.

வரக்காபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.(jn)

 

 

Web Design by Srilanka Muslims Web Team