காத்தான்குடி பள்ளிவாசல்களில் ஷுஹதாக்கள் தின நிகழ்வுகள்! - Sri Lanka Muslim

காத்தான்குடி பள்ளிவாசல்களில் ஷுஹதாக்கள் தின நிகழ்வுகள்!

Contributors

காத்தான்குடி பள்ளிவாசல்களில் படுகொலை செய்யப்பட்டோரின் 32ஆவது ஷுஹதாக்கள் தினம் நேற்று (03) புதன்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.

காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜும்ஆப்பள்ளிவாசல், காத்தான்குடி முதலாம் குறிச்சி ஹூஸைனிய்யா பள்ளிவாசல் ஆகியவற்றில், 3.08.1990அன்று புனித இஷாத் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல நடாத்தினர்.இச்சம்பவத்தில் 103பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

இதில், ஷஹீதாக்கப்பட்டவர்களை நினைவு கூர்ந்து, வருடாந்தம் ஷுஹதாக்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்த வகையில், நேற்று நடந்த ஷுஹதாக்கள் தின நிகழ்வுகள் படுகொலை இடம்பெற்ற காத்தான்குடி முதலாம் குறிச்சி ஹுஸைனிய்யா பள்ளிவாசலில் இடம் பெற்றது.

பள்ளிவாசலின் தலைவர் எம்.சமீம் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில், உலமாக்கள் பள்ளிவாசல் நிருவாகிகள், பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது, அல்குர்ஆன் ஓதப்பட்டதுடன் விஷேட பிராத்தனையை காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப்பள்ளிவாசல், இமாம் மௌலவி ஏ.ஜே.அமீன் நடாத்தினார். ரைஸ் சிறீலங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்ஹ் ஏ.பி.அக்ரம் நழீமி சிறப்புரையாற்றினார்.

இதே போன்று மற்றுமொரு நிகழ்வு காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜும்ஆப்பள்ளிவாசலிலும் நடைபெற்றது.

Web Design by Srilanka Muslims Web Team