காந்தி பயன்படுத்திய கைராட்டை ஏலத்துக்கு வருகிறது! - 60,000 பவுண்ட்ஸ் விலை போகுமாம். - Sri Lanka Muslim

காந்தி பயன்படுத்திய கைராட்டை ஏலத்துக்கு வருகிறது! – 60,000 பவுண்ட்ஸ் விலை போகுமாம்.

Contributors

மகாத்மா காந்தி உபயோகித்த கைராட்டையை 60,000 பவுண்டுகளுக்கு ஏலம் விட பிரிட்டிஷ் ஏல நிறுவனம் முடிவு செய்துள்ளது.சுதந்திர போராட்ட காலத்தில் சிறைசென்ற போது மகாத்மா காந்தி உபயோகித்த கைராட்டையை லண்டனை சேர்ந்த முல்லக் நிறுவனம் ஏலம் விட முடிவு செய்துள்ளது. இதற்கான குறைந்தபட்ச ஏலத்தொகை 60,000 பவுண்டுகள் என்று நிர்ணயித்துள்ளது. இந்த ராட்டை காந்தி எரவாடா சிறையில் பயன்படுத்தியதாகும். அன்னிய துணிகளை வாங்கக்கூடாது என்ற மகாத்மா தானே கதராடைக்குரிய நூலை நூற்றார். சிறையில் நூற்பதற்கு ஏதுவாக சிறிய அளவிலான ராட்டையை மரத்தால் செய்து உபயோகித்தார்.

இந்த சிறிய ராட்டையை அப்போதைய ஆங்கிலேய அதிகாரியான ப்ளாயிட் பபர் என்பவருக்கு பரிசாக கொடுத்தார். இந்த அரிய பொக்கிஷம் இப்போது லண்டனில் ஏலத்திற்கு வந்துள்ளது.இதுகுறித்து ஏல நிறுவனத்தின் ரிச்சார்ட் வெஸ்ட்வுட் கூறியதாவது:மகாத்மா காந்தி பயன்படுத்திய இந்த கைராட்டை, காந்தியின் பொருட்களில் மிகச்சிறந்தது. இது விலைமதிப்பில்லாதது. மகாத்மாவின் போட்டோக்கள், கடிதங்கள், கண்கண்ணாடி, புத்தகங்கள் உள்ளிட்ட 60 பொருட்களுக்கு மேல் எங்கள் நிறுவனம் ஏலத்திற்கு விட்டுள்ளது. அதில் இந்த கைராட்டை மிகுந்த மதிப்பு வாய்ந்தது. இதுபோக இந்திய பொருட்கள் வரிசையில் சீக்கிய அரச பரம்பரை மற்றும் மைசூர் அரசரின் பல பொருட்கள் உள்ளன. அவைகளும் ஏலம் விடப்படும் என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team