காமன்வெல்த் மாநாட்டுக்கு எதிராக செல்போன் டவரில் ஏறி நின்று இளைஞர்கள் போராட்டம்! - Sri Lanka Muslim

காமன்வெல்த் மாநாட்டுக்கு எதிராக செல்போன் டவரில் ஏறி நின்று இளைஞர்கள் போராட்டம்!

Contributors

இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வலியுறுத்தி புதுவையில் தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த இளைஞர்கள் செல்போன் டவரில் ஏறி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுவை உப்பளம் கோலாஸ் நகர் இந்திரா காந்தி ஸ்டேடியம் அருகே பி.எஸ்.என்.எல். அலுவலகம் உள்ளது.

அலுவலகத்திற்கு நேற்று காலை 10.30 மணிக்கு வந்த பெரியார் சிந்தனை இயக்கத்தைச் சேர்ந்த ச.தீனதயாளன், சு.கர்ணா, கா.செந்தில், அலைகள் இயக்கத்தைச் சேர்ந்த வீ.பாரதி, கார்த்திக், மனித உரிமை கழகத்தைச் சேர்ந்த ராஜா, நாராயணன் ஆகியோர் அங்கிருந்த செல்போன் டவரில் ஏறி மிரட்டல் விடுத்தனர்.

தமிழர்களை படுகொலை செய்த இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது. அந்த கூட்டமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும். தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்டவைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இவர்களுடன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சுகுமாரன், இந்திய பூரான்கள் இயக்கம் போன்ஸ் ரமேஷ், செந்தமிழ் இயக்கம் தமிழ்மணி, தமிழ்நாடு முஸ்லிம் கழகம் அஷ்ரப், மெல்லிசைக் குழு அமைப்பு ஆனந்தன் உள்ளிட்டோரும் கோஷமிட்டனர்.

தகவல் அறிந்து, புதுவை ஒதியஞ்சாலை சப்-இன்ஸ்பெக்டர் அறிவுச்செல்வன் மற்றும் போலீஸார் டவரில் ஏறி போராட்டம் நடத்தியவர்களை சமாதானப்படுத்தி அப்புறப்படுத்தினர்.

Web Design by Srilanka Muslims Web Team