காரைதீவு பிரதேசத்தில் மேம்பாட்டு உதவியாளர்கள் ஆறு பேர் நியமனம்! - Sri Lanka Muslim

காரைதீவு பிரதேசத்தில் மேம்பாட்டு உதவியாளர்கள் ஆறு பேர் நியமனம்!

Contributors

நூருல் ஹுதா உமர்

அத்தியவசிய சேவைகளுக்கான காரைதீவு பிரதேச செயலக ஒருங்கிணைப்பாளருக்கான அத்தியாவசிய சேவை திட்டத்தின் கீழ் மேம்பாட்டு உதவியாளர்களாக பட்டதாரி பயிலுனர்கள் ஆறு பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இன்று காரைதீவு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளார் சிவஞானம் ஜெகராஜன் தலமையில் இவ் நியமனம் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திரு எஸ் பாத்தீபன், அம்பாறை மாவட்ட செயலகத்தின் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் புலன் விசாரணை அதிகாரி ஹாஜா முஹம்மத் நபார் மற்றும் பிரதேச செயலக பட்டதாரி பயிலுனர்களும் கலந்து கொண்டார்கள்.

Web Design by Srilanka Muslims Web Team