காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்ற முயற்சி - மக்களிற்கான சட்டத்தரணிகள் அமைப்பு தெரிவிப்பு! - Sri Lanka Muslim

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்ற முயற்சி – மக்களிற்கான சட்டத்தரணிகள் அமைப்பு தெரிவிப்பு!

Contributors

சமீபத்தில் நியமிக்கப்பட்ட நீதவான் ஒருவரின் உத்தரவை பயன்படுத்தி, ஜனாதிபதி செயலகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அகற்றுவதற்கான முயற்சிகள் குறித்து, சட்டத்தரணிகள் குழுவொன்று நீதிச்சேவை ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளது.
மக்களிற்கான சட்டத்தரணிகள் மன்றம் என்ற அமைப்பு இதனை தெரிவித்துள்ளது.
அரசாங்க சட்டத்தரணிகள் குழுவொன்று ஆர்ப்பாட்டக்காரர்களை சங்கிரிலா ஹோட்டல் முன்பாக உள்ள ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதற்கான பகுதியுடன் முடக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
சமீபத்தில் நியமிக்கப்பட்ட நீதவான் ஒருவரின் உத்தரவை பயன்படுத்தி, இந்த முயற்சிகள் இடம்பெறுகின்றன. இந்த நீதவான் அரசாங்கத்துடன் நெருங்கிய தொடர்புள்ளவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மிரிஹான ஆர்ப்பாட்டங்களின் பின்னர் இந்த நீதவான் நியமிக்கப்பட்டார் என மக்களிற்கான சட்டத்தரணிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team