கிண்ணம் யாருக்கு? இந்திய- மேற்கிந்திய தீவுகள் அணிகள் இன்று பலப்பரீட்சை - Sri Lanka Muslim

கிண்ணம் யாருக்கு? இந்திய- மேற்கிந்திய தீவுகள் அணிகள் இன்று பலப்பரீட்சை

Contributors

இந்திய-மேற்கிந்திய தீவு அணிகள் மோதும் மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் போட்டி இன்று கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் நடக்கிறது.

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளிடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் நடந்து வருகிறது.

கொச்சியில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்று முன்னிலை பெற்றது. அடுத்து விசாகப்பட்டணத்தில் நடந்த 2வது போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணீ போராடி வென்றது.

இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, கடைசி ஒருநாள் போட்டி கான்பூரில் இன்று பகல் ஆட்டமாக நடைபெறுகிறது.

அணியின் விபரம்

இந்திய அணி: டோனி, ரோகித் ஷர்மா, ஷிகார் தவான், விராத் கோஹ்லி, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, ஜெய்தேவ் உனத்காட், வினய் குமார், அம்பாதி ராயுடு, மோகித் ஷர்மா, அமித் மிஷ்ரா.

மேற்கிந்திய தீவுகள் அணி: வேய்ன் பிராவோ, ஜான்சன் சார்லஸ் (விக்கெட் கீப்பர்), மார்லன் சாமுவேல்ஸ், டேரன் பிராவோ, லெண்டில் சிம்மன்ஸ், நரசிங் தியோநரைன், டேரன் சம்மி, ஜேசன் ஹோல்டர், சுனில் நரைன், ரவி ராம்பால், டினோ பெஸ்ட், வீராசாமி பெருமாள், கெய்ரன் பாவெல், தினேஷ் ராம்தின். ஆகியோரும் களம் இறங்குகின்றனர்.

Web Design by Srilanka Muslims Web Team