கிண்ணியா குறிஞ்சாக்கேணி சோகம்.. இன்று காலை படகு கவிழ்ந்து மாணவர்கள் உயிரிழப்பு..! - Sri Lanka Muslim

கிண்ணியா குறிஞ்சாக்கேணி சோகம்.. இன்று காலை படகு கவிழ்ந்து மாணவர்கள் உயிரிழப்பு..!

Contributors
author image

Editorial Team

கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் படகு பாதையில் ஆற்றை கடக்க முயன்ற 20 மாணவர்களை ஏற்றிச் சென்ற போது படகு கவிழ்ந்ததில் மாணவர்கள் 6 அல்லது 7 பேர் வரை உயிரிழந்திப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 
இழுவை படகு கவிழ்ந்ததில் மாணவர்கள் , பலர் காணாமலும் போயுள்ளனர். கிண்ணியா நகர சபை பிரதேச சபையையும் இணைக்கும் பாலமே குறிஞ்சாக்கேணி பாலமாகும். இக் குறிஞ்சாக்கேணிப் பால நிர்மாண வேலைகள் நடப்பதால், தற்காலிகமாக சேவையில் ஈடுபட்ட மோட்டார் இழுவைப் படகு உடைந்து, கவிழ்ந்ததில் பலர் நீரில் மூழ்கினர்.
இச்சம்பவம் இன்று (23.11.2021) காலை இடம் பெற்றுள்ளது. பாடசாலை மாணவர்கள் உட்பட 20 பேர் பயணம் செய்த நிலையில் இவ்விபத்து சம்பவித்திருக்கிறது. காப்பற்றப்பட்ட 11 பேர் நோயாளர் காவு வண்டியின் மூலமாக கிண்ணியா தள வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளார்கள்.
இவ்விபத்தில் மாணவர்கள் உட்பட 6 பேர் மரணித்துள்ளதோடு, பலர் காணாமல் போயுள்ளார்கள். அவர்களை தேடும் பணி தீவிரமாக இடம் பெற்று வருகிறது.
 பிந்திக் கிடைத்த (உத்தியோகபூர்வமற்ற) தகவல்களின்படி 3 மாணவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

Web Design by Srilanka Muslims Web Team