கிரிக்கெட்டை கிண்டலடித்து விநாயகர் கார்ட்டூன் - Sri Lanka Muslim

கிரிக்கெட்டை கிண்டலடித்து விநாயகர் கார்ட்டூன்

Contributors

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு ஆணையத்திற்கும், தென்னாப்ரிக்க கிரிக்கெட் அணிக்கும் இடையிலான எல்லையை காட்டும் விதமாக வரையப்பட்ட விநாயகர் கார்ட்டூனுக்கு தென் ஆப்ரிக்க இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
தென் ஆப்ரிக்காவின் சண்டே டைம்ஸ் பத்திரிகையில் சமீபத்தில் ஒரு கார்ட்டூன் வெளியானது.

அதில் விநாயகரின் ஒரு கையில் கிரிக்கெட் பேட்டும், மற்றொரு கையில் பணக்கட்டுக்களும், பலிபீடத்தில் சி.எஸ்.ஏ.,யின் தலைமை நிர்வாக அதிகாரியை பலி கொடுப்பது போன்றும் சித்தரிக்கப்பட்டுள்ளது.

விநாயகரை பி.சி.சி.ஐ போன்று சித்தரித்து இந்திய சுற்றுப்பயணத்தின் மூலம் தென்னாப்ரிக்க கிரிக்கெட் அணி லாபமடைவதற்காக சி.எஸ்.ஏயின் தலைமை நிர்வாக அதிகாரி ஹாரூன் லோகர்ட்டை பலி கொடுக்கத் தயாராக இருப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

பிரபல அரசியல் கார்ட்டூனிஸ்ட்டான ஜொனாதன் ஷாப்பிரோ இந்த கார்ட்டூனை வரைந்துள்ளார். இது இந்துக்களின் மனதை காயப்படுத்தும் விதத்தில் வரையப்பட்டுள்ளதாக, தென்னாப்ரிக்க இந்து தர்ம சபா இந்து மகாசபா மற்றும் அங்குள்ள தமிழ் சங்கம் ஆகியவை கண்டனம் தெரிவித்துள்ளன.

மேலும் இந்த கார்ட்டூனை வெளியிட்டதற்காக அந்த பத்திரிகை மன்னிப்பு கேட்க வேண்டும் என இந்த அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

இதுகுறித்து சண்டே டைம்ஸ் பத்திரிக்கையின் ஆசிரியர் பிலிசியா ஓபலேட் கூறுகையில், இந்துக்களை காயப்படுத்தும் வகையில் கார்ட்டூன் வரையவில்லை என்றும் கிரிக்கெட்டின் நிலை குறித்து வரைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

 

Web Design by Srilanka Muslims Web Team