கிழக்கின் எழுச்சி அமீருடனான நேர்காணல் » Sri Lanka Muslim

கிழக்கின் எழுச்சி அமீருடனான நேர்காணல்

wafa66

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

கேள்வி; அண்மைக்காலமாக ஊடங்களிலும் உங்களது முகநூல் பதிவுகளிலும் அதிகமாக பேசப்பட்டுவரும் தலைமைத்துவ சபை, கிலாபத் பற்றி விளக்கம் தாருங்கள்.

பதில்; இவ்விரு விடயங்கள் பற்றி அச்சூடகங்கள் அண்மையில்தான் பேசத்தொடங்கியுள்ளன. ஆனால் இவ்விடயங்கள் பற்றி நாம் நீண்ட காலமாக பேசி வருகின்றோம். இப்போதுதான் அச்சூடகங்களின் கவனத்தை ஈர்ந்துள்ளது. தாமதமாகவேனும் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளதையிட்டு மகிழ்ச்சி அடைகிறோம்.

அடிப்படையில் இவ்விரு கோட்பாடுகளும் எம்முடையதல்ல. சுமார் ஆயிரத்து நாநூறு ஆண்டுகளுக்கு முன் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டல்களை பின்பற்றி நடந்த குலபாயே ராஷிதீன்களினால் நடைமுறைப்படுத்தப்பட்ட விடையங்களே இவை.
தலைமைத்துவ சபை என்று நாம் நாமமிட்டிருப்பது அன்றைய மஷூரா சபையையே.

துரதிஷ்ட வசமாக மஷூரா என்பதும் அதன் அடிப்படை அம்சங்களும் மிகத்தவறாக கையாளப்பட்டு வருவதனால் அதன் மெய்வடிவத்தை மாற்று மொழிகளில் நேரடியாக பிரதிபலிக்கச்செய்வதற்காகவே தமிழில் அதை ‘தலைமைத்துவ சபை’ என்றும் ஆங்கிலத்தில் ‘Leader’s Council’ என்றும் நாம் அழைக்கிறோம்.

ஏனெனில் சமூகம் தொடர்பான ஆலோசனைகளை மேற்கொள்வதற்காக நபி அவர்களும் பின்வந்த கலீபாக்களும் தங்களுக்கு ஆலோசனை வழங்கக்கூடியவர்களாக அழ்ழாஹ்வுக்கு அஞ்சக்கூடியவர்க்ளில் ஆழ்ந்த மார்க்க அறிவும் அரசியல் அறிவும் கொண்டவர்களையே தேர்ந்து எடுத்திருத்திருந்தார்களே அல்லாமல் கண்ட நின்றவர்களை எல்லாம் இணைத்துக்கொள்ளவில்லை.

முஸ்லிம் சமூகத்துக்கு தலைவர்களாக இருக்க தகுதியானவர்களே ஆலோசனை சபையின் அங்கத்தவர்களாக இருந்தார்கள் என்பதை வரலாற்றை நுனுக்கமாய் ஆராய்ந்தால் புரிந்து கொள்ளலாம்.
அத்தகைய தகைமைகளை கொண்டோர்கள் ஒன்றிணைந்து மேற்கொள்வதற்கு பெயரே மஷூராவாகும்.

அபூபக்கர் (ரழி) அவர்கள் அடுத்த கலீபாவை தெரிவு தெரிவு செய்யும் விடயத்தையும் உமர் (ரழி) அவர்கள் தனக்கு அடுத்த கலீபாவை தெரிவு செய்யும் விடயத்தையும் இத்தகைய தலைமைத்துவ தகுதி கொண்டோருனுடையே ஆலோசித்து முடிவு செய்தார்கள்.

ஆகவேதான் ஆலோசனை சபையின் உண்மை வடிவத்தை தமிழை மொழியாகக்கொண்ட இலங்கை முஸ்லிம்கள் நேரடியாக புரிந்து கொள்ள ஏதுவாக நாம் தலைமைத்துவ சபை என்று நாமமிட்டுள்ளோம்.
இத்தகைய சபையொன்றே முஸ்லிம்களின் அரசியல் விவகாரங்களில் தீர்க்கமான முடிவுகளை எடுக்க தகுதியானது.

கேள்வி; நீங்கள் கூறுகின்றவாறான தலைமைத்துவ சபையை உருவாக்குவது இன்றைய காலகட்டத்தில் இலங்கை போன்ற நாடொன்றில் சாத்தியமாகுமா?

பதில்; நிட்சயமாய் சாத்தியமாகும். அல்லாஹ்வை அஞ்சக்கூடிய ஆழ்ந்த மார்க்க அறிவும் இஸ்லாமிய அரசியல் அறிவும் கொண்டவர்கள் இலங்கையில் நிறையவே இருக்கின்றார்கள்.

கேள்வி; இத்தகையோரை எவ்வாறு அடையாளம் கண்டு ஒன்றிணப்பீர்கள்?

பதில்; அல்லாஹ்வை அஞ்சுவபர்களை அடையாளம் காணும் வழியை நபியவர்கள் நமக்கு கற்றுத்தந்துள்ளார்கள்.

எவர்களை பார்த்தால் உங்களுக்கு அல்லாஹ்வின் ஞாபகம் வருகின்றதோ, எவர்களுடன் பேசினால் உங்களின் இல்ம் எனும் அறிவில் விருத்தி ஏற்படுகின்றதோ அவர்களே அழ்ழாஹ்வை அஞ்சுபவர்கள் என்பது நபி மொழியின் கருத்து. ஆகவே தலைமைத்துவ சபைக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதில் எந்த சிரமமும் இருப்பதாக நாம் காணவில்லை.

கேள்வி; ஜனநாயக வழிமுறையிலான வாக்கெடுப்பு நடைமுறையிலிருக்கும் இலங்கை போன்றொரு நாட்டில்
உங்கள் முன்னெடுப்புக்கு மக்கள் ஆதரவு கிடைக்குமென நம்புகின்றீர்களா?

பதில்; நாம் புதிதாக எதையும் பேசவில்லை. இஸ்லாமிய வழிமுறையையே பேசுகிறோம்.

விஷேடமாக இன்றைய இளைஞர்கள் இஸ்லாமிய வழிமுறைகள் மீது அதீத நாட்டம் கொண்டவர்களாக இருப்பதாலும்,இஸ்லாமிய வழி முறைகளே இன்று உலகிலுள்ள அத்தனை பிரச்சனைகளுக்கும் தீர்வு தரக்கூடியவை என்பதை உலகமே புரியத்தொடங்கியுள்ள கால கட்டத்தில் எமது முன்னெடுப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்று நம்புகிறோம். அவ்வாறு கிடைக்கத்தவறினால் எமது சமூகக்கடமையை முடிந்தளவு செய்து விட்ட திருப்தியுடன் ஒதுங்கிக்கொள்வோம். அதன் விழைவுகளை சமூகம் அனுபவிக்க நேரும்.

சிலவேளை விழைவுகளைப்பற்றி கரிசனை கொள்ளாத இளைஞர்கள் இப்பணியை இன்னும் தீவிரமாக முன்னெடுக்கலாம். அவர்கள் எம்மைப்போலல்லாது தீவிர போக்குடையவர்களாகவும் இருக்கலாம்.

ஆக, கிழக்கின் எழுச்சி எம்முடன், எமது மரணத்துடன் நிறைவுறாது. அது நல்லாட்சியெனும் கிலாபத்தை நிறுவும் வரை தலைமுறை தலைமுறையாய் தொடரும்.

கேள்வி; எமது முதல் கேள்வியிலேயே கிலாபத்தை பற்றியும் கேட்டோம்.
இலங்கை போன்றோர் நாட்டில் கிலாபத் பற்றி பேசுவது சர்ச்சையை ஏற்படுத்தமாட்டாதா?

பதில்; சர்ச்சை ஏற்படும் என்பதற்காக பிரச்சினைகளுக்கான தீர்வை சொல்லாமல் விடுவது பெரும் குற்றமல்லவா? இதில் சர்ச்சை கொள்ள என்ன இருக்கின்றது.

அறிவாளிகள், சக்கரவர்த்திகள் என்று அடையாளபடுத்தப்பட்ட முஸ்லிம்கள் அல்லாத பெர்னாட் ஷா நெப்போலியன் தொடங்கி மகாத்மா காந்தி தாண்டி புத்த தர்மத்தை இன்றும் போதித்துக்கொண்டிருக்கும் தலாய் லாமா போன்றோரே உமரின் கிலாபத் போன்றோர் ஆட்சியே இன்றைய உலகப்பிரச்சினைகளுக்கு தீர்வு தரவல்லது என பகிரங்கமாக கூறியிருக்கும் போது அந்த கிலாபத்தின் வாரிசுகளான நாம் கூறுவதில் என்ன தவறு இருக்கிறது.

எவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்
முழு உலகத்திலும் உண்மையான கிலாபத் நிறுவப்பட்டே தீரும். இலங்கை அதற்கு விதிவிலக்காய் இருக்காது. பிரித்தானிய வெஸ்ட்மினிஸ்டர் முறைமையையும் மற்றைய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட நிறைவேற்று அதிகார முறைமையையும் ஏற்று நடைமுறைப்படுத்தி தோல்வியடைந்துள்ள உலகம் ஏன் சிறந்த முறையென நிரூபிக்கப்பட்ட கிலாபத்தை ஒதுக்கவேண்டும்?

துரதிஷ்டவசமாக கிலாபத் எனும் நல்லாட்சிக்கு இரத்தம் பூசி அகோரமாக்கியுள்ள அழுக்கை முதலில் கழுவி அதன் உண்மையான அழகிய தோற்றத்தை உலகுக்கு காண்பிக்கும் ஆரம்ப கடமையை கிழக்கின் எழுச்சி செய்து கொண்டு வருகிறது. இப்பணியை மேலும் விஸ்தரிக்கும் முயற்சியில் நாம் ஈடுபட்டுள்ளோம்

கேள்வி; சமகால இலங்கை முஸ்லிம் அரசியல் பற்றி என்ன கூறவிரும்புகின்றீர்கள்?

பதில்; நாற்றம் தாங்கமுடியவில்லை

கேள்வி; முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹகீம் மீது குற்றம்கண்டு அவரை எதிர்த்துக்கொண்டிருப்போர் பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்; ஹகீமை இஸ்லாத்தின் விரோதியாகவே நான் காண்கிறேனேயல்லாமால்
உலகலாவிய கீழ்த்தரமான அரசியலில் அவரும் ஒரு அங்கம்.

ஆனால் இஸ்லாத்தை உயிரிலும் மேலாய் மதிக்கும் முஸ்லிம்களுக்கு அரசியல் தலைமை வழங்கும் எந்த யோக்கியமும் ஹகீமுக்கு கிடையாது.

ஆனால் இன்று ஹகீமுக்கு எதிராக குற்றம் சுமத்தி கூட்டங்கள் போட்டுக்கொண்டு திரிகின்றவர்கள் இறுதிவரை தமது பதவிகளுக்காக போராடியவர்களே தவிர ஹகீமின் இஸ்லாமிய விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக கொதித்தெழுந்தவர்கள் அல்ல.

ஆகவே இவர்களின் கூப்பாடுகள் ஹகீமுக்கு சற்று சரிவை ஏற்படுத்தலாம் ஆனால் இன்றைய தேவை ஹகீமை துரத்தும் சம நேரத்தில் இஸ்லாமிய சிந்தனையுள்ள புதிய தலைமையை நிறுவுவதாகும்.

அந்தத் தலைமை தனிமனிதனல்ல மாறாக தலைமைத்துவ சபையாகும்.

Web Design by The Design Lanka