கிழக்கு அரச அலுவலகங்களில் பௌத்த பிக்குகளை நியமிக்க கோத்தா, பொது பல சேனா நடவடிக்கை ? - Sri Lanka Muslim

கிழக்கு அரச அலுவலகங்களில் பௌத்த பிக்குகளை நியமிக்க கோத்தா, பொது பல சேனா நடவடிக்கை ?

Contributors

கிழக்கு மாகாணத்தில் உள்ள பிரதேச அரச அலுவலகங்களின் முக்கிய பதவிகளில் பௌத்த பிக்குகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது அங்குள்ள சிங்கள அதிகாரிகளை வடமாகாண பிரதேச காரியாலங்களுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

இதன் பின்னர் அந்த பகுதிகளில் சிங்கள பௌத்த பிக்குகளை முக்கிய பதவிகளில் அமர்த்தும் செயற்பாடுகளை, உள்நாட்டு அரச நிர்வாக அமைச்சு மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் பொது பல சேனா என்ற சிங்கள அடிப்படைவாத அமைப்பு ஆகியவற்றின் கோரிக்கைகளுக்கு அமைவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே கிழக்கு மாகாணத்தின் பல முக்கிய பொறுப்புக்களில் பௌத்த பிக்குகள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது என ஒரு வெளிநாட்டு இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது

(j.ns)

Web Design by Srilanka Muslims Web Team