கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரிய நியமனம் தொடர்பில் முறைப்பாடு! » Sri Lanka Muslim

கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரிய நியமனம் தொடர்பில் முறைப்பாடு!

Contributors

qout7

-பாதிக்கப்பட்டவர்கள்- 

மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பாக கடந்த 2013.12.11ம் திகதிய தினகரன் பத்திரிகையின் பிரகாரம் நாங்கள் விண்ணப்பித்து நேர் முகப் பரீட்சைக்கு 2013.12.23ம் திகதி தோற்றினோம் பின்னர் அதற்கான நியமனம் 2014.01.15ம் நியமனம் வழங்கப்பட்டது.

இதன் படி வழங்கப்பட்ட நியமனமானது பத்திரிகையில் கேட்டுக்கொண்ட தகைமைகளின் அடிப்படையில் வழங்கப்படவில்லை மாறாக குறைவான மற்றும் எங்களைக் போன்று அதே தகமைகளைக் கொண்ட பட்டதாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் கேட்டுக்கொண்ட 4 வகையான தகைமைகளின் அடிப்படையில் முதலாம் வகையான தகைமைகளைக் கொண்ட மாணவர்களுக்கும் இந்நியமனம் வழங்கப்படவில்லை. (சப்ரியா – கிண்ணியா)

இது தொடர்பாக பரிசீலனை செய்து சிறந்த தீர்வினை பெற்றுத் தருமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

குறிப்பு: திருகோணமலை மாவட்டத்தில் 44 பட்டதாரிகளுக்கு தகவல் தொழில்நுட்பத்திற்காக வழங்கப்பட்ட நியமனத்தில் 02 பட்டதாரிகள் மாத்திரமே பத்திரிகைகளில் குறிப்பிடப்பட்ட முதலாவது தெரிவு செய்யும் தகமைகளைக் கொண்டுள்ளனர்.(ccn)

 

Web Design by Srilanka Muslims Web Team