'கிழக்கு மாகாண பாடசாலைகளின் நீர், மின் கட்டணங்களை அரசு செலுத்தவும்' - இம்ரான் மகரூப்! - Sri Lanka Muslim

‘கிழக்கு மாகாண பாடசாலைகளின் நீர், மின் கட்டணங்களை அரசு செலுத்தவும்’ – இம்ரான் மகரூப்!

Contributors

கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் இதுவரை காலமும் அரசாங்கத்தால் செலுத்தப்பட்டு வந்த நீர்க் கட்டணங்களை, இனிமேல் பாடசாலைகள்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, மின் கட்டணங்களை செலுத்துவதற்கு ரூபாய் 1,200 வழங்கப்படுகிறது. வேறு மாகாணங்களில் இதைவிட கூடுதலாக வழங்கப்படுகிறது.

எனினும், கிழக்கு மாகாண பாடசாலைகள் கஷ்டத்தை எதிர்கொள்வதால் இந்தக் கட்டணங்களை அரசாங்கங்கம் முழுமையாக செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், வைத்தியசாலைகளில் காணப்படுகின்ற அம்பியூலன்ஸ்களுக்கு QR முறையை ஊடாக 50 லீட்டர் பெட்ரோல் பெறுவதற்கான வாய்புக்கள் மாத்திரம் காணப்படுவதாகவும் அதேபோன்று ஓட்டோகளுக்கும் 5 லீட்டர் பெட்ரோல் போதாது உள்ளமையால் அம்பியூலன்ஸ் மற்றும் ஓட்டோகளுக்கு மேலதிக எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.

 

ஹஸ்பர்

Web Design by Srilanka Muslims Web Team