குடிக்க தண்ணீர் கிடைக்காமல் 40 பேர் உயிரிழந்த பரிதாபம் - Sri Lanka Muslim

குடிக்க தண்ணீர் கிடைக்காமல் 40 பேர் உயிரிழந்த பரிதாபம்

Contributors

நைஜீரியாவை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 40 பேர் குடிக்க தண்ணீர் இல்லாததால் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆப்ரிக்க நாடான சோமாலியா மற்றும் எரிட்ரியா நாட்டில் இருந்து ஏராளமான மக்கள் பிழைப்பு தேடி கடல் வழியாகவும், வாகனங்களிலும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனர்.

இந்நிலையில் நைஜீரியாவை சேர்ந்த பெண்கள், சிறுவர்கள் உள்பட 60 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 டிரக்கில் அல்ஜீரியாவின் டமாரன்ராசெட் நகருக்கு அகதிகளாக சென்றனர்.  சகாரா பாலைவனத்தை கடந்து செல்லும் போது நைஜர் வடபகுதியான அர்லிட் நகரத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் தூரத்தில் டிரக் ஒன்று பழுதானது.

இதனால் பாலைவனத்தில் சிக்கிய அகதிகளால் மணல் பரப்பில் நீண்ட தூரம் நடந்து செல்ல முடியவில்லை.  தண்ணீர் கூட கிடைக்காமல் நாக்கு வறண்டு பெண்கள், சிறுவர்கள் உள்பட 40 பேர் இறந்தனர்.  இதேபோன்று பாலைவனத்தில் சிக்கி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team