குடிமக்கள் வெளிநாடுகளில் பாரம்பரிய உடை அணிய வேண்டாம்: ஐக்கிய அரபு அமீரகம் எச்சரிக்கை » Sri Lanka Muslim

குடிமக்கள் வெளிநாடுகளில் பாரம்பரிய உடை அணிய வேண்டாம்: ஐக்கிய அரபு அமீரகம் எச்சரிக்கை

Contributors
author image

BBC

வெளிநாடுகளில் இருக்கும் போது பாரம்பரிய உடையை அணிய வேண்டாமென்று ஐக்கிய அரபு அமீரகம் தனது குடிமக்களை எச்சரித்துள்ளது.

வெள்ளை அங்கி மற்றும் தலையை மறைத்தபடி துணி அணிந்திருந்த அமீரக தொழிலதிபர் ஒருவரை தரையில் தள்ளி அமெரிக்காவின் ஒஹையோ மாகாண போலிஸ் கைது செய்தது.

விடுதி ஊழியர் ஒருவர் அவருக்கு தீவிரவாத தொடர்புகள் இருக்கும் என சந்தேகித்துள்ளார்.

முகத்தை மறைக்கும் திரைகளுக்குத் தடை இருக்கும் சில ஐரோப்பிய நாடுகளில் அது போன்ற திரையை அணிய வேண்டாம் என்று பெண்களுக்கு ஐக்கிய அமீரகத்தின் வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team