குப்பு மனிதர்களைப்போல் உரையாடும் “மார்மோùஸட்’ குரங்குகள்! - Sri Lanka Muslim

குப்பு மனிதர்களைப்போல் உரையாடும் “மார்மோùஸட்’ குரங்குகள்!

Contributors

மார்மோùஸட் இனத்தைச் சார்ந்த குரங்குகள் மனிதர்களைப்போல உரையாடிக்கொள்வதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

“உலகிலேயே மிகச் சிறிய குரங்கினமான மார்மோùஸட்கள் 8 அங்குல நீளம் கொண்டவை. 30 நிமிடங்கள் வரை தொடர்ந்து ஒன்றுக்கொன்று உரையாடிக்கொள்கின்றன’ என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆசிஃப் காஸன்ஃபார் கூறியது:

“இவற்றின் உரையாடல்கள் பறவை, தவளை போன்ற மற்ற விலங்கினங்கள் எழுப்பும் குரலோசையில் இருந்து வேறுபட்டு மனித உரையாடல்களுடன் ஒத்துள்ளன. இதன்காரணமாகவே மார்மோùஸட் குரங்குகள் சிம்பன்ஸி, மனிதக் குரங்குகள் போன்ற மற்ற குரங்கினங்களிலிருந்து வேறுபட்டு தனித்தன்மையுடன் உள்ளன.

ஒன்றுக்கொன்று நட்புடன் பழகுவது, தகவல் தொடர்புகளுக்கு உரையாடல் சப்தங்களை எழுப்புவது ஆகியவற்றில் மனிதர்களுடன் ஒத்துள்ளன’ என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team