குருணாகல் மேயர் பதவி நீக்கம்! - Sri Lanka Muslim
Contributors

குருணாகல் மாநகர முதல்வர் துஷார சஞ்சீவ விதாரணவை அப்பதவியில் இருந்து நீக்கி, வடமேல் மாகாண ஆளுநர் அட்மிரல் ஒஃப் ப்ளீட் வசந்த கரண்ணாகொடவினால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஆவணம் நிறைவேற்றப்படாமை மற்றும் 2020 மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் மற்றும் அமுலாக்க உத்தரவுகளுக்கு இணங்காத காரணத்தினால் குருநாகல் மாநகர முதல்வர் பதவி நீக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதவி நீக்கம் 2022 டிசம்பர் 31ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளதாக ஆளுநர் வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team