குறிஞ்சாக்கேணி படகு பாதை விபத்து இடம்பெற்று ஒரு வருடம்! - Sri Lanka Muslim

குறிஞ்சாக்கேணி படகு பாதை விபத்து இடம்பெற்று ஒரு வருடம்!

Contributors

கிண்ணியா, குறிஞ்சாக்கேணி இயந்திர படகு பாதை கோர விபத்து ஏற்பட்டு இன்றுடன் ஒரு வருடமாகின்றது. கடந்த 2021.11.23 ந் திகதி ஏற்பட்ட இவ் விபத்தில் எட்டு அப்பாவி உயிர்கள் பலியாகின இதில் ஐந்து மாணவர்களும் மூன்று பொது மக்களும் பலியாகினர்.

இப்பலியான சம்பவத்தினையடுத்து இன்று (23) பெரிய கிண்ணியா ஆண்கள் பாடசாலையினால் எதிர்ப்பு பேரணி ஒன்று இடம்பெற்றது. இப் பேரணி பாடசாலை முன்றலில் ஆரம்பித்து குறிஞ்சாக்கேணி பாலம் வரை சென்றடைந்தது. இப்பேரணியில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள், கிண்ணியா பிரதேச செயலாளர் உட்பட வலயக்கல்வி பணிப்பாளர் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இப்பேரணியில் சென்றவர்கள் பால நிர்மாண பணியினை துரிதகதியில் செய்து தருவதோடு, இரு பகுதி மக்களினது போக்குவரத்தினை இலகுபடுத்தி தருமாறும் வேண்டிக்கொண்டனர். அத்துடன், அப்பாவி உயிர்களை பலி கொடுக்க நாங்கள் தயாரில்லை என்றும் அவ்வாறான சம்பவம் ஒன்று இனிமேலும் ஏற்படக்கூடாது என்றும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.

இக்கோரிக்கைகளை முன்வைத்து மகஜர் ஒன்றையும் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனியிடம் கையளித்தனர்

இதே வேலை கிண்ணியா பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட  உயிர் நீத்தவர்களுக்கான துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது.

இவ் பிரார்த்தனையின் போது உயிர் நீத்தவர்களின் குடும்பங்கள், உலமா சபையினர், கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரிகள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

 

ஹஸ்பர்

Web Design by Srilanka Muslims Web Team