குறைந்த போட்டியில் அதிக சதம்: கோஹ்லி உலக சாதனை » Sri Lanka Muslim

குறைந்த போட்டியில் அதிக சதம்: கோஹ்லி உலக சாதனை

Contributors

இந்தியா கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரின் முதல் போட்டி நேப்பியரில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் இந்தியா அணி 24 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இப்போட்டியில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் இளம் வீர் வீராட் கோஹ்லி சதம் அடித்தும் இந்தி அணி தோல்வியைத் தழுவியது.

இப்போட்டியில் அடித்து சதம் மூலம் 18 சதங்களை வேகமாக அடித்த வீரர் என்ற சாதைனைக்கு கோஹ்லி சொந்தமானார். தனது 119-வது இன்னிங்சில் இச்சாதனையை அவர் நிகழ்த்தினார்.

இதற்கு முன்பு இந்திய அணியின் முன்னாள் தலைவர் கங்குலி தனது 174-வது இன்னிங்கில் 18 சதம் அடித்தது உலக சாதனையாக இருந்தது. இந்த சாதனையை கோஹ்லி முறியடித்தார்.

அதுபோல் சேசிங்கில் வீராட் கோஹ்லி சதம் அடித்தும் இந்திய அணி முதல் முறையாக தோல்வியைத் தழுவியது. கோஹ்லி சேசிங்கில் 12 முறை சதம் அடித்துள்ளார். அதில் 11 முறை இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team