கென்யா போர்க் குற்றவாளியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சந்திக்கவுள்ளார் - Sri Lanka Muslim

கென்யா போர்க் குற்றவாளியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சந்திக்கவுள்ளார்

Contributors

சர்வதேச நீதிமன்ற விசாரணையை எதிர்நோக்கியுள்ள கென்ய ஜனாதிபதியை  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சந்திக்கவுள்ளார்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கென்யாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் கென்யாவிற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2007ம் ஆண்டில் கென்யாவில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு ஜனாதிபதி உஹூரு கென்யாட்டாவை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்திக்க உள்ளார்.

கென்யா சுதந்திரம் அடைந்ததன் பின்னர் முதல் தடவையாக பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில், கென்ய ஜனாதிபதி பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் கென்யாவிற்கு எதிரான வழ்கின் போது பொதுநலவாய நாடுகள் அமைப்பு உரிய ஒத்துழைப்பை வழங்கவில்லை என கென்யா குற்றம் சுமத்தியுள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் கென்ய ஜனாதிபதிக்கு எதிரான வழக்கு விசாரணைகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team