கெபினற் அமைச்சராகும் ஹரீஸ் MP? - Sri Lanka Muslim
Contributors
author image

ஊடுருவி

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் எம்.பி யுடன்அரசாங்கத் தரப்பு பேச்சு வார்த்தை ஒன்றில் ஈடுபட்டுள்ளதாக நம்பத்தகுந்த இரகசியத் தகவல்கள் சிறிலங்கா முஸ்லிம்ஸ் இணையத்தளத்திற்கு தெரவிக்கின்றன.

 

முஸ்லிம் காங்கிரஸை விட்டு அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முன்வந்தால் கெபினற் அமைச்சுப் பதவி தருவதற்கு தயாராக இருப்பதாக அரசங்கத்தரப்பின் சில முக்கியஸ்தர்கள் ஹரீஸ் எம் பியை தொடர்பு கொண்டு பேரம் பேசலில் ஈடுபட்டுள்ளனர்.

 

இது தொடர்பில் ஹரீஸ் எம்பி தனது நெருக்கமானவர்களுடன் கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டு வருவதாகவும் அவ் இரகசியத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

அரசாங்கத்தில் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து செயற்பட்டு வந்தாலும் இடையிடையே முரண்பாடுகள் தோற்றம் பெறுகின்றன. இதனால் முஸ்லிம் காங்கிரஸை உடைப்பதற்கு தனித்தனி பேரம் பேசல்கள் தான் வெற்றி அளிக்கும் என்பதில் அரசாங்கத்தரப்பு உறுதியாக உள்ளது.
இதற்குரிய நகர்வாகவே அரசாங்கத்தரப்பு ஹரீஸ் எம் பியை தொடர்பு கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

 

ஹரீஸ் எம்பி இப் பேரம் பேசல் தொடர்பில் மௌனம் காத்துவருவதாக அவ் இரகசியத் தகவல்கள் எம்மிடம் தெரிவிக்கின்றன.

 

நாம் அறிந்த வகையில் இன்னும் ஓர் இரு மாதங்களில் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் அரசியல் அரங்கில் எதிர்பாராத கட்சித் தாவல்கள் இடம்பெறவுள்ளன. ஒரு வேளை இந் நகர்வை எதிர்பார்த்தவராக அமைச்சர் ஹரீஸ்?

Web Design by Srilanka Muslims Web Team