கேஸ் சிலிண்டர் வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் ஆராய விசேட குழு! - Sri Lanka Muslim

கேஸ் சிலிண்டர் வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் ஆராய விசேட குழு!

Contributors

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய பாராளுமன்ற விசேட ஆலோசனைக் குழுவொன்றை கூட்ட சபாநாயகர் அனுமதி

இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விடுத்த கோரிக்கைக்கு அமைய, அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன அனுமதி வழங்கினார்.

அதற்கமைய இது தொடர்பில் அனைத்து கட்சித் தலைவர்கள் மற்றும் உரிய நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்குமாறு எதிர்க்கட்சி எம்.பி. சாந்த பண்டார விடுத்த கோரிக்கையையும் சபாநாயகர் ஏற்றுக் கொண்டதோடு, அமைச்சர் லசந்த அளகியவன்ன அதற்கான அழைப்பை விடுப்பார் என தெரிவித்தார்.

அதற்கமைய, நாளை (01) முற்பகல் 9.00 மணிக்கு இது தொடர்பான கூட்டம் கூடவுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team