கொக்கா கோலா தயாரிப்பு நிறுவனத்திற்கு மூன்று மாத தடை விதிப்பு - Sri Lanka Muslim

கொக்கா கோலா தயாரிப்பு நிறுவனத்திற்கு மூன்று மாத தடை விதிப்பு

Contributors

கொக்கா-கோலா பேவரோஜஸ் தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள சகல அனுமதிப் பத்திரங்களையும் மூன்று மாதங்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொப்பிடடிகொல்லாவ நீதவான் நீதிமன்றமே இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

பயன்படுத்தக் கூடிய காலத்தை குறிப்பிடாமல் கொக்கா-கோலா போத்தல் ஒன்றை விற்பனைக்காக, விநியோகம் செய்தமை தொடர்பான மூன்று குற்றச்சாட்டுக்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பின் படி பியகமவில் இருக்கும் கொக்கா-கோலா நிறுவனத்தில் உற்பத்தி செய்தல், களஞ்சியப்படுத்தல், விநியோகம் செய்த மற்றும் விற்பனை செய்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு மூன்று மாதங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக வடமத்திய மாகாண மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்ய அந்த நிறுவனம் தீர்மானித்துள்ளது.(lw)

 

Web Design by Srilanka Muslims Web Team