கொரிய மொழி மொழித் தேர்ச்சிப் பரீட்சை ஆரம்பம்! - Sri Lanka Muslim

கொரிய மொழி மொழித் தேர்ச்சிப் பரீட்சை ஆரம்பம்!

Contributors

11 ஆவது கொரிய மொழித் தேர்ச்சிப் பரீட்சை இன்று ஆரம்பமாகவுள்ளது.

இந்தப் பரீ்ட்சை இன்றும் நாளையும் ஆறு பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.

கொழும்பு நாலந்தாக் கல்லூரி, கோத்தமீ மகளிர் கல்லூரி, அசோகா வித்தியாலயம், டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரி,  இசிபத்தன கல்லூரி,  தர்ஸ்டன் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் பரீட்சை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

இம்முறை கொரிய மொழித் தேர்ச்சிப் பரீட்சையில் 20,536 பேர் தோற்றவுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெவித்துள்ளது. இதேவேளை, இம்முறை பரீட்சையில் தோற்றுவதற்காக கடவுச் சீட்டுகளை பரீட்சார்த்திகள் சமர்ப்பிக்க வேண்டியதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பரீட்சை நிலையங்களுக்குள் கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட இலத்திரணியல் உபகரணங்களை எடுத்துச் செல்வதும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

 

 

Web Design by Srilanka Muslims Web Team