கொள்ளுப்பிட்டியில் சுற்றிவளைக்கப்பட்ட விபச்சார விடுதியில் அரேபியரும் - Sri Lanka Muslim

கொள்ளுப்பிட்டியில் சுற்றிவளைக்கப்பட்ட விபச்சார விடுதியில் அரேபியரும்

Contributors
author image

ஊடுருவி

கடந்த 15ம் திகதி தாய் மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிய விபச்சார விடுதி கொள்ளுப்பிட்டியில்  விஷேட பொலிஸ் பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்டது.

 

ஆடம்பரமாக அமைக்கப்பட்டிருந்த இவ்விபச்சார விடுதியில் விசச்சாரத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

 

இக்கைது நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிசாருக்கு மூன்று விடயங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாம்.

 

 

01 இரு சவுதி அரேபியர்கள் விபச்சார விடுதியிலிருந்து கைது செய்யப்பட்டமை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்ததாம் .

 

தாய்லாந்து பெண்களின் உடல் வேட்டையை நாடி கைது செய்யப்பட்ட இரு அரேபியரும் பல தடைவை இவ் விடுதிக்கு வந்துள்ளார்களாம்.

 

இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்ட தினமே இலங்கைக்கு வந்துள்ளனர். அதில் ஒரு அரேபி 22 முறை இலங்கை வந்து இந்த தாய்லாந்து பெண்களின் சேவையைப் பெற்றுள்ளாராம்.

 

 

02 சர்வதேச பாடசாலையில் கல்வி பயிலும் இரு இளம் மாணவர்களும் பொலிசாரின் சுற்று வளைப்பில் பிடிபட்டுள்ளனர்.

 

மாணவர்கள் இருவரும் கொழும்பு 7இல் உள்ள பிரபல்யமான வர்த்தகர் ஒருவரின் மகன்மார் ஆவார். (சகோதரர்கள்?)

 

03 விபச்சாரத்தில் ஈடுபடுபவதற்கு முன்பதிவு செய்தவர்களையும் கடந்த காலங்களில் வந்தவர்களின் பெயர் லிஸ்டை எடுத்துப் பார்த்த போது பொலிசாருக்கு அடுத்த ஆச்சரியம் காத்திருந்தது.

 

இவ்விபச்சார விடுதிக்கு இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வீரர்கள் மற்றும்  பிரபல அரசியல் பெரும் புள்ளிகளின்  பெயர்களும் முகங்களும்  இப்பதிவுப் புத்கத்திலும் வீடியோக்களிலும் காண்பப்பட்டதாம்.
இச்சம்பவங்களை அருகில் உள்ள டீக்கடையில் இருந்தவாறு கவலையுடன்
 பார்த்துக்கொண்டிருந்த   முஸ்லிம் வயோதிபர் திடிரென ஆத்திரத்துடன் சத்தமிட்டார். ஒட்டமொத்த முஸ்லிம்களையும் அவமானப் படுத்தும்

 

இந்த அரேபிகளின் ஜூப்பாவையும் தலைப்பாகையும் கழற்றி விட்டு நல்லா குத்துங்க பொஸ்.
இரும்பு அடிக்கும் இடத்தில் ஈ க்கு என்ன வேலையாம்.

 

குறிப்பு – கொழும்பு மற்றும் அதனை அண்டிய இடங்களில் ஆயுர்வேத  மஸாஜ்   என்று பதிவு செய்யப்பட்டு இயங்கும் நிலைகள் மீது பொலிசார் திடீர் சுற்றுவளைப்பை மேற்கொள்ளவுள்ளதாக இரகசியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

Web Design by Srilanka Muslims Web Team