கொழும்பில் முக்கிய வீதிகள் நாளை மூடப்படும் - Sri Lanka Muslim

கொழும்பில் முக்கிய வீதிகள் நாளை மூடப்படும்

Contributors

கொழும்பில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாட்டு தலைவர்களின் உச்சி மாநாட்டை முன்னிட்டு நாளை ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து ஒத்திகைகள் இடம்பெறவுள்ளன என்று போக்குவரத்து பொலிஸார் அறிவித்துள்ளார்.

இதனால் நாளை காலை 6.00 மணி தொடக்கம் நண்பகல் 12.00 மணிவரையான காலப்பகுதிகளில் கொழும்பில் முக்கிய வீதிகள் சில தற்காலிகமாக மூடப்படப்படும் என்றும் போக்குவரத்து பொலிஸார் அறிவித்துள்ளார்.

இதன்பிரகாரம், பழைய நாடாளுமன்ற சுற்றுவட்டம் தொடக்கம், காலிமுகத்திடல் சுற்றுவட்டம், கொள்ளுப்பிட்டி சந்தி முதல் லிபர்ட்டி சுற்றுவட்டம், ஆனந்த குமாரசுவாமி மாவத்தை, கிறீன்பாத், பௌத்தாலோக்க மாவத்தை, சுதந்திர சதுக்கம் முதல் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம் வரையான வீதிகளே முழுமையாக அல்லது பகுதியளவில் மூடப்படவுள்ளன.

ஆகையால், இக்காலப்பகுதியில் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் சாரதிகளை அறிவுறுத்தியுள்ளனர்.

Web Design by Srilanka Muslims Web Team