கொழும்பில் 50 வருடங்களாக இயங்கி வந்த ரண்முது ஹோட்டல் மூடப்படுகிறது? - Sri Lanka Muslim

கொழும்பில் 50 வருடங்களாக இயங்கி வந்த ரண்முது ஹோட்டல் மூடப்படுகிறது?

Contributors

கொழும்பு கொள்ளுப்பிடியில் இயங்கி வந்த ரன்முது ஹோட்டல் இம்மாதத்துடன் மூடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 50 வருடங்களாக ரன்முது ஹோட்டல் இயங்கி வந்தது.

ரன் முது ஹோட்டலுக்கு அருகே நிர்மாணிக்கப்ட்டு வரும் ஹயாத் ஹோட்டல் விஸ்தரிப்புக்காக ரன்முது ஹோட்டல் அரசுக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

1976 நடைபெற்ற அணிசேரா உச்சி மகாநாட்டின் போது, திறந்து வைக்கப்பட்ட ரண்முது ஹோட்டல் நிலப்பரப்பில் ஹயாத் ஹோட்டலின் பொழுது போக்கு மற்றும் விளையாட்டுப் பகுதி அமைக்கப்படவுள்ளது.

ஹயாத் ஹோட்டலை விஸ்தரிப்பதற்கு ரண்முது ஹோட்டலை உள்ளடக்கிய 63 பேர்ச் நிலப்பரப்பு தேவையென தெரிவிக்கப்பட்டதன் காரணமாக ஹோட்டல் நிலப்பரப்பை அரசுக்கு ஒப்படைக்க நிர்ப்பந்திக்கப்பட்டதாக ரண்முத்து ஹோட்டல் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

டொமினிக்கன் குடியரசின் இலங்கை கவுன்சிலராக இரந்த சேர் அப்துல் டபிள்யு.எம். அமீர் அர்வளால் அணிசேரா உச்சி மகாநாடு இலங்கையில் நடைபெற்ற போது, அப்போதைய பிரதமர் திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆதரவுடன் ரண்முது ஹோட்டல் ஆரம்பிக்கப்பட்டது.

அன்று முதல் கடந்த நவம்பர் வரை இந்த ஹோட்டல் இயங்கி வந்தது. குறிப்பாக முஸ்லிம் சமூகம் தொடர்பான பல்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெற்ற ஒரு மத்தியஸ்தானமாகவும் மத்திய தர வகுப்பினரின் திருமணங்கள் நடைபெறும் ஒரு மையமாகவும் இந்த ஹோட்டல் இருந்து வந்தது.

அரசாங்கம் இந்த ஹோட்டலைப் பொறுப்பேற்பதற்காக சந்தை விலையில் நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கை எடுத்திருப்பதாக ஹோட்டல் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

அணிசேரா மகாநாட்டின் போது ஆரம்பிக்கப்பட்ட இந்த ஹோட்டல், பொதுநவாய உச்சி மகாநாட்டுக்கு முன் மூடப்படுவது குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.vn

12s26

Web Design by Srilanka Muslims Web Team