கொழும்பு பஸ்தியன் மாவத்தை தனியார் பஸ் தரிப்பிடத்தில் பாதுகாப்பு கமெரா கட்டமைப்பு - Sri Lanka Muslim

கொழும்பு பஸ்தியன் மாவத்தை தனியார் பஸ் தரிப்பிடத்தில் பாதுகாப்பு கமெரா கட்டமைப்பு

Contributors

 

கொழும்பு புறக்கோட்டை பஸ்தியன் மாவத்தையில் உள்ள பஸ் தரிப்பிடத்தை இணைக்கும் பாதுகாப்பு கமெரா கட்டமைப்பொன்றை ஏற்படுத்த தனியார் போக்குவரத்து அமைச்சசு தீர்மானித்துள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணைக்கு மற்றும் பஸ்தியன் மாவத்தை தனியார் பஸ் தரிப்பிடம் ஆகியவற்றை இதன் மூலம் தனியார் போக்குவரத்து அமைச்சில் இருந்தே கண்காணிக்க முடியும்.

பஸ் தரிப்பிடத்தில் பயணிகளுக்கு ஏற்படும் இடையூறுகளை குறைத்து சிறந்த சேவையை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேவேளை தனியார் பஸ் சேவை தொடர்பில் பொதுமக்களிடம் இருந்து கிடைக்கும் முறைப்பாடுகளுக்கு ஸ்கைப் தொழிற்நுட்பத்தின் ஊடாக விரைவான தீர்வுகளை வழங்குவது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.(lw)

Web Design by Srilanka Muslims Web Team