கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் மாதுக்களை வசப்படுத்தும் பௌத்த பிக்கு - Sri Lanka Muslim

கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் மாதுக்களை வசப்படுத்தும் பௌத்த பிக்கு

Contributors

கொழும்பில் உள்ள புறநகர்ப் பகுதி ஒன்றில் மோதர தேவாலயம் என்ற பெயரில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பௌத்த பிக்கு வீடொன்றில் வைத்து மாந்திரீக ரீதியில் பெண்களை வசப்படுத்தி வருவதாக மக்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

இவர் தன்னை ஒரு பௌத்த துறவியாக அடையாளப்படுத்திக் கொண்டு வீட்டின் முகப்பில் இந்து சமயத்தினை பிரதிபலிக்கும் தெய்வச் சிலைகளையும், படங்களையும் வைத்து பணம் சம்பாதிப்பதிலும் மற்றும் பெண்களை வசப்படுத்துவதிலும் அண்மைக்காலமாக ஈடுபட்டு வருகின்றார்.

இனவாதத்தினை இந்த நாட்டிலே விதைத்துக் கொண்டிருக்கும் பௌத்த பிக்குகள் ( துறவி என்று தன்னை அடையாளப்படுத்துவோர்) தற்போது வேற்று மதத்தினை இழிவுபடுத்தும் செயற்பாடுகளில் இறங்கியிருப்பது மற்றைய மதங்களிடையே ஒரு குழப்பநிலையை உருவாக்கியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக உரியவர்களுக்கு அறிவித்தும் ( இந்து சமயம் சார்ந்த உயர் அதிகாரிகளுக்கு) இதுவரைக்கும் இதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.(lw)

Web Design by Srilanka Muslims Web Team