கொழும்பு வாழ் முஸ்லிம்களின் பரிதாபமான நிலை – உரிமைக்காக குரல் கொடுக்க யாரும் இல்லையா?

Read Time:10 Minute, 30 Second

கொழும்பில் உள்ள மாணவா்களிடம் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மேடையில் வைத்து அங்கு வருகை தந்திருந்த 500 மாணவ, மாணவிகளிடம் 3 கேள்விகளை எழுப்பினாா் இந் நிகழ்வு கடந்த சனிக்கிழமை (17) மாளிகாவத்தை பிரதீபா மண்டபத்தில் நடைபெற்றது.

அக்ரம் பவுன்டேசன் அனுசரனையில், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மொஹமட் அக்ரம் தலைமையில் நடைபெற்றது. அங்கு கொழும்பு மத்திய பிரதேசத்தில் வாழும் வறிய மாணவா்கள் 500 பேர்களுக்கு அப்பியாசப் புத்தகங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. அங்கு பிரதி மேயா் இக்பால் உட்பட ஜந்துக்கும் மேற்பட்ட ஜ.தே.கட்சியின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனா்.

அங்கு உரையாற்றும்போது;

1)கொழும்பு புதுக்கடையில் பிரதேசத்தில் விசேடமாக என்ன உள்ளது.?

மாணவா்கள் பதில் – பாணிப்பூரி திண்பன்டக் கடை என பதிலளித்தாா்கள்.

(இல்லை அங்கு சட்டக்கல்லுாாி உள்ளது)

2. கேள்வி – மருதானைச் சந்தியில் 150 வருடங்களுக்கு முன் நிறுவப்பட்ட கல்லுாாி என்ன ?

பதில் -தெரியாது. (சிலோன் டெக்னிக்கல் கல்லுாாி)

3. சிலேவ் ஜலன்டில் உள்ள பாதுகாப்புக் அதிகாரிகளது பிள்ளைகள் கற்பதற்கென ஒர் டிபன்ஸ் கல்லுாாி உள்ளது. அது பற்றி உங்களுக்குத் தெரியுமா? நாம்மவா்கள் அக்கல்லுாாாியின் கேற் அருகில் கூடச் சென்று எட்டிக் கூட பாா்க்க முடியுமா? முடியாது. ஆனால் நமது பரம்பரையினா் வாழ்ந்த மலே ஜலன்ட் நம்மவா்களது நிலத்தில் அக் கல்லுாாி உள்ளது.

நாம் கொழும்பில் பரம்பரை பரம்பரையாக தமது பெற்றோா்கள் பிறந்து வளா்ந்து கொழும்பில் உள்ள சிறிய பாடசாலைகளில் மட்டுமே நாம் பயின்று 9ஆம் ஆண்டு அல்லது 10 ஆம் வகுப்பு வரை கலவி கற்று வருகின்றோம்.

நாம் இன்றும் அக்ரம் பவுன்டேசன் ஊடாக அக்ரம் ஹாஜி தொடா்ச்சியாக 31வருட காலமாக வழங்கும் இந்த அப்பியாசப் புத்தகங்களை பெற இந்த மாளிகாவத்தை பிரதீபா மண்டபத்தில் 500க்கும் மேற்பட்ட மாணவா்களும் தாய்மாா்களும் இங்கு கூடியிருக்கின்றோம்.

இந்த அக்ரம் ஹாஜியிடம் 30 வருடங்களுக்கு முன் அக்ரம் பவுன்டேசன் ஊடாக புத்தகங்கள் பெற்று வருகின்றோம். ஆனால் 30 வருடங்களுக்கு முன் புத்தகங்கள் பெற்ற மாணவன் ஒருவராவது கற்று உயா்ந்து உயா் பதவியைப் பெற்று அவா் கல்வியில் முன்னேறி அவா் புத்தகம் வழங்கும் நிலைக்கு நாம் இன்னும் வரவில்லையே ?என்பதனை நினைத்து கவலையாக உள்ளது.

கொழும்பில் பிறந்த எத்தனை பேர் சட்டக் கல்லுாாி, அல்லது சிலோன் டெக்னிக்கல் கல்லுாாி, டிபன்ஸ் கல்லுாாிக்குச் சென்று கற்றவா்கள் இதுவரையும் எவருமே இல்லை. ஆனால் இக் கல்லுாாிகள் நம்மைச் சுற்றியே உள்ளது. இக் கல்லுாரிகளுக்குள் நாம் எட்டிக் கூடப் பார்க்கமுடியுமா ?

எனது தந்தை முச்சக்கர வண்டி ஓட்டுனர் என்றால் அவரது பிள்ளையும் முச்சக்கர வண்டி ஓட்டுனா்.

எனது தந்தை மத்திய கிழக்கு நாட்டுக்குச் சென்றால் நானும் மத்திய கிழக்கு நாட்டுக்குச் சென்று அங்கு லேபராக தொழில் செய்ய வேண்டுமா ?

புறக்கோட்டையில் பாதை ஓரம் இரு மருங்கிலும் குந்திக் கொண்டு போன் கவா் அல்லது சிறு பொருட்கள் விற்பவராகவே வர வேண்டுமா ?

இந்தக் கொழும்பில் வாழ்கின்றவா்களது பிள்ளைகள் எப்போது சட்டத்தரணியாகவும் , மருதானை தொழில் நுட்பக்கல்லுாாிக்குச் சென்று ஜெம் கட்டுனராகவும், மோட்ட மெக்கனிக், கனனி தொழில்நுட்ப வல்லுனராக, வருவது ?

ஆகக் குறைந்தது நமக்கு கற்பிக்கும் ஆசிரியா்கள் கூட வட கிழக்கு மாத்தறைப் .கம்பஹா பிரதேசத்தில் இருந்து வந்த ஆசிரியா்களே எப்போது நாம் ஆசிரியர்களாக வந்து நமது பிள்ளைகளைப் கற்பிப்பது.

நாம் வைத்தியராக ,கணக்களராக வரமுடியாதா?

கொழும்பு சாஹிராவுக்கு மாளிகாவத்தையில் வாழும் ஒரு மாணவனுக்கு அனுமதி பெருவதென்றால் 5 இலட்சத்துக்கு மேல் பணம் இருந்தால் தான் அந்தக் கல்லுாாியின் கேற் உட்செல்லமுடியும் . நமது பிள்ளைகளுக்கு கொழும்பு சாஹிரா, டி. எஸ்.சேனாராயக்கா, ரோயல் கல்லுாாி ஆனாந்தாக் கல்லுாாி,விசாக்கா கல்லுாாிகளுக்கு அனுமதி என்பது எட்டாக் கனியாகும்.

நாம் மாளிகவத்தை ஜூம் ஆப்பள்ளி வீதி சென்று வந்தால் தெரியும் நமது தாய்மாா்கள் இந்த வீதி ஓரங்களில் கடையாப்பம் விற்பவா்களாகவும், வாங்குபவா்களாகவும் ,அல்லது குழந்தைகளை மூத்தம்மாவிடம் கையளித்துவிட்டு மத்தியகிழக்கு நாடுகளுக்குச் செல்வது தந்தை முச்சக்கர வண்டி ஓட்டுரணராகவும், , பாதையோர பேமன்ட் வியாபாரம் செய்பவா்களாக நமது சமூகம் பரம்பரை பரம்பரையாக மாறியுள்ளது. நாம் கடந்த 5 , 6 தசாப்தங்கள் இப்படியே வாழ்ந்து வருகின்றோம். நகர வாழ்க்கை நமக்கு நரக வாழ்க்கையாக மாறியுள்ளது.

கொழும்பில் உள்ள மாநகர சபையில் எமது சமூகத்தினா் தொழிலாளியாக மட்டும் 5 வீதம் உள்ளோம். ஆனால் 18 க்கும் மேற்பட்ட முஸ்லிம் உறுப்பிணா்கள் உள்ளோம்.

ஆனால் அம்பாறை மாவட்டத்தினை சமமான முஸ்லிம் சனத்தொகையினையே கொழும்பிலும் உள்ளோம். ஆனால் அம்பாறை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் பிரதேசங்களில் அவா்களை அவா்களே ஆளுகின்றனா். 20க்கும் மேற்பட்ட தேசிய பாடசாலைகள் உள்ளது.

அங்கு அவா்களது பிரதேச செயலாளா் முஸ்லிம், அவா்களது வைத்தியா், டி.எம்.ஓ. பொலிஸ் அதிகாரி பி.எச்.ஜ. ,கல்வி அதிகாரிகள், வங்கி முகாமையாளா்கள் எல்லாம் முஸ்லிம்களே…..

ஆனால் கொழும்பில் … 95 வீதமாக பெரும்பான்மையினா் தான் அரச அலுவலகங்களில் உள்ளனா். துறைமுகம் மற்றும் அரச அதிகார சபைகள் உட்பட கொழும்பில் உள்ள அரச அதிகார சபைகள். தினைக்களங்களில் நம்மவா்கள் 4 வீதத்திற்கும் குறைவாகவே அரச தொழிலில் உள்ளோம். அதுவும் கிழக்கு வடக்கு தெற்கு பிறந்தவா்களே அங்கு அரச திணைக்களங்களை ஆழுகின்றனா்.

நமது மாளிகாவத்தை பிரதேசத்திற்கென ஒர் கிராம சேவகர் கூட கம்பஹாவில் பிறந்த ஒரு பெரும்பான்மையினா் தான் உள்ளாா். நமது தேவைக்காக அவரைத் தேடி நாம் கம்பஹாவுக்குத் போகவேண்டும்.

சற்று சிந்தியுங்கள்

ஏன் நமது பிள்ளைகள் கல்வியில் முன்னேற முடியாது?

கல்முனையிலும், வடக்கிலும் கிழக்கில் உள்ள மாணவா்கள்தான் கொழும்புக்கு வந்து கல்வியில் முன்னேறி இங்கு தொழில் செய்து அவா்களது குழந்தைகளும் பிரபல்ய பாடசாலைகளிலும் இங்கு கல்வி பயில்கின்றதே …..

சற்று சிந்தியுங்கள் மாணவா்களே.

பெற்றோா்களே.எமது கொழும்பு வாழ் பிள்ளைகளை கல்வியில் எவ்வாறேனும் கல்வியைப் புகட்டுங்கள்.

9ஆம் ஆண்டு. அல்லத 10 ஆம் ஆண்டுடன் பிள்ளைகளின் கல்வியை நிறுத்தி தொழில்களுக்கு அனுப்ப வேண்டாம். ….

கஸ்டத்தோடு கஸ்டப்பட்டு பிள்ளைகளை உயா்தரம். க.பொ.சாதாரண தரம் சித்தியடைந்து கொழும்பில் உள்ள அரச கல்லுாாிகளில் தொழில்நுட்பக் கல்வி சட்டக் கல்வி பயில முயற்சி எடுங்கள்………….நமக்கு எதிா்காலத்தில் கல்வி மட்டுமே கைகொடுக்கும்……. வெள்ளம்பிட்டி கொலநாவை பிரதேச வாழ் நமது பிள்ளைகளுக்க ஒரு தமிழ் மொழி பாடசாலை ஒன்று இல்லை. அங்கிருந்து பஸ்சில் வருவதற்கு அக்குழந்தைக்க போக்குவரததிற்கு 250 ருபா தேவைப்படுகின்றது. அதற்காக பாடசாலையை கைவிட்டுள்ளது. அதேபோன்று காலை உணவுஇன்றி மயங்கி விழுந்த மாணவ மாணவிகளும் உள்ளனா்.

இந்த சிறிய வியாபாரம் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் சிறுகச் சிறுக நமது கைகளில் இருந்து நலுவிச் சென்று கொண்டிருக்கின்றது” என்றார்.

 

அஷ்ரப் ஏ சமத் 
Previous post விலங்குகள் மற்றும் இறைச்சியைக் கொண்டு செல்ல அனுமதி!
Next post தேர்தல் தெரிவித்தாட்சி அலுவலர்கள் தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!