கோட்டாபய ஒப்புக்கொள்ளாவிட்டால் மாற்று நடவடிக்கை - பங்காளிக்கட்சிகள் எடுத்துள்ள முடிவு..! - Sri Lanka Muslim

கோட்டாபய ஒப்புக்கொள்ளாவிட்டால் மாற்று நடவடிக்கை – பங்காளிக்கட்சிகள் எடுத்துள்ள முடிவு..!

Contributors
author image

Editorial Team

கெரவலபிட்டி மின் நிலைய பங்குகளை அமெரிக்காவுக்கு வழங்கும் உடன்படிக்கை தொடர்பிலான பேச்சுவார்த்தைக்கு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) ஒப்புக்கொள்ளாவிட்டால் மக்களிடம் நேரடியாகச் சென்று பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளோம் என்கிறார் நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார (Vasudeva Nanayakkara). அத்தோடு, இது குறித்து பேசுவதற்கு அரச தலைவரை வற்புறுத்தப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தம் குறித்த தீர்மானம் முறையான தயார்படுத்தல்களுடன், அரசியல் தலைமைகளின் நிலைப்பாட்டுக்கமையவே எடுக்கப்படும் என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொரவலப்பிட்டி மின்நிலையத்தின் 40 சதவீத பங்கை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் ஒப்பந்தம் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு குறித்த பங்காளி கட்சிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை முன்னர் அரச தலைவர் நிராகரித்திருந்தார்.

இந்த நிலையில் குறித்த ஒப்பந்தத்தை தொடர்ந்தும் எதிர்ப்பதாகத் தெரிவித்து வரும் ஆளும்தரப்பு பங்காளிக் கட்சித் தலைவர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள், நேற்றும் இந்த விடயம் தொடர்பாக கூடிக் கலந்துரையாடியிருந்தார்கள். இருப்பினும் இன்று மாலை பங்காளிக் கட்சித் தலைவர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களை அரச தலைவர் சந்திப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team