‘கோட்டா கோ ஹோம்’ போராட்டக்காரர்களில் ஒருவரான தானிஷ் அலிக்கு மேலும் 14 நாட்கள் சிறைத்தண்டனை!

Read Time:1 Minute, 33 Second

மெகசின் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளப் போராட்டக்காரரான தானிஸ் அலி,  சிறைச்சாலைக்குள் கையடக்க தொலைபேசியை பயன்படுத்திய குற்றச்சாட்டிற்காக 14 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் போது ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் அத்துமீறி நுழைந்து, ஒளிபரப்பு நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக, குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள, தானிஷ் அலி எதிர்வரும் 15 ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதன்படி, கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள தானிஷ் அலி சிறைச்சாலைகள் விதிமுறைகளை மீறி தொலைபேசி பயன்படுத்திய குற்றச்சாட்டில் சிறைச்சாலை நீதிபதி முன் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது, தானிஷ் அலி தமது குற்றத்தை ஒப்புக்கொண்டமையை அடுத்து, அவர் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்.

Previous post நல்லிணக்கம், மத ஒருமைப்பாடு குறித்து கருத்து வெளியிட்ட ஜனாதிபதியால், கோட்டாவின் ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் அறிக்கையை தூக்கி எறிய முடியுமா? – ஹக்கீம் கேள்வி!
Next post ஜோஸப் ஸ்டாலினுக்கு விளக்கமறியல்!